பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 109 "என்சொலிப்புகழ்வதிங்குனையே" என்று புகழ்ந்து பாராட்டுகிறார். "விடிவிலாத்துன்பஞ்செயும் பராதின. வெம்பிணி அகற்றிடும் வண்ணம் படிமிசைப்புதிதாய்ச் சாலவும் எளிதாம் படிக்கொரு சூழ்ச்சி நீ படைத்தாய்" என்று காந்தியின் அறப்போர் உத்தியைப் பாராட்டுகிறார். "மன்னுயிரெல்லாம் கடவுளின் வடிவம் கடவுளின் மக்கள் என்று உணர்தல் இன்னமெய்ஞானத்துணிவினை மற்றாங்கு இழிபடுபோர்கொலை தண்டம் பின்னியே கிடக்கும் அரசியல் அதனில் பிணைத்திடத்துணிந்தனை பெருமான்" என்று அறப்போர் அரசியலுக்கு ஒரு புதியவிளக்கம் கொடுத்து பாரதி பாடுகிறார். இவ்வாறு ஒத்துழையாமை நெறியினால் இந்திய விடுதலைக்கு வழி கிடைக்கும் என்று கூறுகிறார். காந்தியின் அறப்போர் வழியைப் பற்றி பாரதி கூறும் போது இந்திய நாட்டின் பாரம்பரியமான அறவழி அரசியலை நினைவு கூர்ந்து அந்த மரபு வழியில் பாரதி காந்தியையும் காண்கிறார். தாதாபாய் நவுரோஜி தாதாபாய் நவுரோஜி பாரதத்தாய் பெற்றெடுத்த தவப் புதல்வர்களில் ஒருவர். தேசிய விடுதலை இயக்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவர். இந்திய தேசிய காங்கிரஸ் மகா சபைக்குத் தலைமை தாங்கியவர். இந்திய நாட்டில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நடத்திய பொருளாதாரச் சுரண்டல் கொள்ளையைத் தொகுத்து எழுதி உலகிற்குக் காட்டியவர். அந்த மகானைப் பற்றி, பாரதி, "முன்னாளில் இராமபிரான் கோதமனரா திய புதல்வர் முறையினின்று பன்னாடு முடிவணங்கத் தலைமைநிறுத் திய வெமது பாரத கண்டமதில் என்று தொடங்கி இந்நாளில் ஏற்பட்டுள்ள துயர் தவிர்க்க வந்த முதியோன் என்று தொடர்ந்து