பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 130 தானாகவராது. அதற்கான முயற்சிகள் அனைத்து தரப்பிலும் நடைபெற வேண்டும். அனைவரும் தனி நிலையிலும் கூட்டு முறையிலும் இடைவிடாது தொழில்களும் தொழில் முயற்சிகளும் செய்தல் வேண்டும். பாரத சமுதாயம் அரசியல் நெறியிலும் செல்வச் செழிப்பிலும் கல்வி அறிவு ஞானத்திலும் உயர்ந்தும், உலகிற்கு புது நெறி காட்டிவையத்தின் தலைமையாக உயர்வு கொள்ள வேண்டும். தலைமை என்பது யாராவது நியமனம்செய்வது மூலமாகவோ அல்லது ஒதுக்கீடு செ ய் வதன் மூல மாகவோ அ ல் ல அது வெறு ம் சம் பிரதாய பூர்வமானதேயாகும். அதற்கு மாறாக, முயற்சியால், தகுதியால், திறமையால், அனைவரும் அங்கீகரித்து ஏற்றுக்கொள்வதன் மூலம் அமைவதாகும். வெறும்தோற்றத்திலும் வேடத்திலும் தலைமையில்லை. இந்தப் புதுநெறிபடிப் படியாக முழுமை பெற வேண்டும். அதற்கான முன்னேற்றப் பாதையில் சிரமங்கள் ஏற்பட்டால், அவைகளையும் சமாளித்துக்கொண்டு முன் செல்ல வேண்டும். நெறி தவறியோரை பாரத அன்னை விழுங்கிக் கூத்தாடிவிடுவாள். பாரத மக்கள் அந்த விரும்பப் படாத சக்திகளை ஒதுக்கி நிராகரித்து விடுவார்கள். பாரத அன்னை அப்பாதகர்களை ஏறி மிதித்திடுவாள். காறி உமிழ்ந்திடுவாள். பொய் ஏடுகள் பொசுக்கப் படவேண்டும். அவ்வப்போது தர்மத்தின் வாழ்வை சூது கவ்வும் கட்டுண்டு பொறுத்திருந்து காலம் வரும்போது (காண்டிபம்) நமது வீரம் பதில் சொல்ல வேண்டும். நமக்குக் கண்ணனும்பார்த்தனும் துணை நிற்பார்கள். கண்ணன் நமது வழி காட்டி பார்த்தன் நமது செயல்வீரன் அவர்கள் பாரதத்தின் ஆன்மாக்கள். எங்கோ உள்ள மோட்சத்திற்குச் செல்வதற்காக அல்ல நமது முயற்சிகள் எல்லாம். இந்த பாரத புண்ணிய பூமியில் இந்த உலகில் மனிதகுலம் முழுமைக்கும் முழுமையான விடுதலை காண்பதற்கான முயற்சிகளாகும். அதுவே முக்தி அதுவே மோட்சம் அதுவே அறம் பொருள் இன்பத்தின் வழியில் அடையும் விடுபேறு. தனிமனிதனுடைய பசியை பிச்சைப்போட்டு போக்கி விடலாம். ஆனால் சமுதாயத்தின் பசியை பிச்சை போட்டு அடக்கி விட முடியாது. ஆற்றிவிட முடியாது போக்கிவிட முடியாது. உலகிலேயே அதிக மான அளவில் அனைத்து வளங்களும் செல்வவளமும் அறிவுவளமும் நிறைந்த பூமி பாரத புண்ணிய பூமி. ஆனால் காலக்கொடுமையால் இன்று வறுமை மிகுந்த நாடாக நீடிக்கிறது. வறுமையென்றால் வெறும் பொருள் வறுமை வாழ்க்கை வறுமை மட்டுமல்ல, உழைப்பில் வறுமை, உழைப்பு சக்தியின் வறுமை, உற்பத்தித்திறனில் வறுமை, கல்வியில் வறுமை, அறிவில் வறுமை, ஞானத்தில் வறுமை முதலியவைகளாகும். இத்தகைய பன்முக வறுமைகளின் கொடுமைகளைப் போக்க, ஒவ்வொருவரின் தனிமுயற்சியும் அனைவரின் கூட்டு முயற்சியும் தேவை. கூடித்தொழில் செய் என்று பாரதி கூறுகிறார்.