பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் "சிவசக்தி" என்னும் பாடலில், "நின்னருள் வேண்டுகிறோம் - எங்கள் நீதியும் தர்மமும் நிலைப்பதற்கே பொன்னவிர் கோவில்களும் - எங்கள் பொற்புடை மாதரும் மதலையரும் அன்னநல் அணிவயல்கள்- எங்கள் ஆடுகள், மாடுகள் குதிரைகளும் இன்னவை காத்திடவே-அன்னை இணை மலர்த்திருவடி துணை புகுந்தோம் எம்முயிர்ஆசைகளும் - எங்கள் இசைகளும் செயல்களும் துணிவுகளும் செம்மையுற்றிட அருள்வாய் - நின்றன் சேவடி அடைக்கலம் புகுந்து விட்டோம்" என்று பாடுகிறார். 14 வல்லமைதாராயோ - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே என்றும்", எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவே எண்ணல்வேண்டும், திண்ணிய நெஞ்சம் வேண்டும், தெளிந்த நல்அறிவு வேண்டும் என்றும் வேண்டுகிறார்."பராசக்தி" என்னும் பாடலில் ■ "நாட்டு மக்கள் பிணியும் வறுமையும் நையப்பாடென்றொரு தெய்வங்கூறுமே கூட்டி மானுடச் சாதியை ஒன்றெனக் கொண்டு வையம் முழுதும் பயனுறப் பாட்டிலேயறங்காட்டெனுமோர் தெய்வம்" "நாட்டு மக்கள் நல முற்று வாழவும் நானிலத்தவர் மேனிலை எய்தவும்" என்று பாடுகிறார். "சக்தி" என்னும் தலைப்பில் "வாழ்வு பெருக்கும் மதியே சக்தி மாநிலம் காக்கும் மதியே சக்தி தாழ்வுதடுக்கும் சதிரே சக்தி சஞ்சலம் நீக்கும் தவமே சக்தி விழ்வு தடுக்கும் விறலே சக்தி i விண்ணையளக்கும் விரிவே சக்தி ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி - உள்ளத் தொளிரும் விளக்கே சக்தி"