பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் "ஜாதி நூறு சொல்லுவாய், போ, போ, போ என்வும், "பறையருக்கும் இங்கு தியர் புலையருக்கும் விடுதலை பரவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை "திறமைகொண்ட தீமையற்ற தொழில்புரிந்து யாவரும் தேர்ந்த கல்வி ஞானம் எய்தி வாழ்வம் இந்த நாட்டிலே" என்றும் "எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே -பொய்யும் ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே-இனி நல்லோர் பெரியர் என்னும் காலம் வந்ததே - கெட்ட நயவஞ்சக்காரருக்கு நாசம் வந்ததே." என்றும், குரு கோவிந்தர் என்னும் பாடலில், "ஆ ரியர் சாதியுள்ஆயிரம் சாதி வகுப்பவர் வகுத்து மாய்க, நீர் அனைவிரும் தருமம், கடவுள், சத்தியம், சுதந்திரம் என்பவை போற்ற எழுந்திடும் வீரச் சாதி ஒன்றனையே சார்ந்தோராவிזו" எனவும் கூறுகிறார். பாப்பாா பாட்டில் பாரதி, "சாதிகள் இல்லையடி பாப்பா - குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம் "நீதி உயர்ந்த மதி கல்வி - அன்பு நிறைய உடையவர்கள்மேலோர்" எனவும், முரசுப்பாட்டில் "நாலு வகுப்பும் இங்கொன்றே - இந்த நான்கினில் ஒன்று குறைந்தால் வேலை தவறிச்சிதைந்தே - செத்து வீழ்ந்திடும் மானிடச் சாதி" என்றும் "சாதிக்கொடுமைகள் வேண்டாம் அன்பு தன்னில் செழிந்திடும் வையம் ஆதரவுற்றிங்கு வாழ்வோம் - தொழில் ஆயிரம் மாண்புறச் செய்வோம்' என்றும் முரசு கொட்டுகிறார். "உயிர்பெற்ற தமிழர்' என்னும் தலைப்பில் 24