பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 25 "மனிதரில் ஆயிரம் சாதி - என்ற வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை" எனவும், "ஒன்றுண்டு மானிட சாதி - பயின்று உண்மைகள் கண்டவர் இன்பங்கள் சேர்வார் என்றும். "நந்தனைப்போல் ஒரு பார்ப்பான் - இந்த நாட்டினில்இல்லை, குணம் நல்லதாயின் எந்தக் குலத்தினரேனும் - உணர் வின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம்' என்றும், "சூத்திரனுக்கு ஒரு நீதி - தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி எனச் சாத்திரம் கொல்லிடுமாயின் - لاقےI5[ சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்" என்றும் தெளிவு படுத்திக் கூறுகிறார். மு ன்னர் தோன்றிய சாத்திரங்களைப் ப யிலும் போது , காலத்திற்கேற்ற வகையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்பது பாரதியின் கொள்கை. "பின்னும் பல ஸ்மிருதிகள் செய்தார் - அவை பேணும் மனிதர் உலகினில் இல்லை மன்னும் இயல்பினவல்ல - இவை மாறிப்பயிலும்இயல்பினவாகும்" ான்று குறிப்பிடுகிறார். " குனத்தாலும் செய்கையாலும் நான்கு வர்ணங்களைப் படைத்தேன்" என்று கண்ணபிரான் கூறும்போது வர்ணங்கள் எப்படி பின்னர்குலங்கள்ஆயின என்பது கேள்விக்குரிய பொருளாகும். இங்கே வர்ணம் என்பது புறத்தோற்றம் அல்ல, அகப்பண்பாடு ஆகும். சத்துவம், ராஜசம், தாமசம் என்றும் மனித குணங்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு பயிலப்பட்டிருக்கிறது. இம்முக்குணங்களில் எது மேலோங்கி ஒருவனிடம் இருக்கிறதோ அதன்படி அவனுடைய செயல்பாடு அமைகிறது என்பதை தத்துவ சாத்திரங்கள் குறிப்பிடுகின்றன. பாரதி தனது பகவத் கீதை மொழிபெயார்ப்பு நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையில் "கண்ணபிரான் மனிதருக்குள் சாதி வேற்றுமையும், அறிவு