பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 33 என்று மனம் போனபடி செல்லும் விலங்கியல் முறையைக் குறிப்பிடுகிறான். அதை மறுத்து இராமன் நன்று தீதென்று அறியாமல் வாழ்வது விலங்கியல், தக்கது இன்னதகாதன இன்ன் என்று அறிந்து செயல்பட்டால் விலங்குகளும் தேவ நிலை எய்தலாம் எனறு கூறுகிறான். "நன்று தீதென்று இயல்தெரிநல்லறிவு இன்றி, வாழ்வது அன்றோ விலங்கின் இயல் நின்ற நன்னெறி, நீ அறியாநெறி ஒன்றும் இன்மை உன்வாய்மை உணர்த்துமால் என்றும், "தக்க இன்ன தகாதன இன்ன என்று ஒக்க உன்னலர் ஆயின், உயர்ந்துள மக்களும் விலங்கே, மனுவின் நெறி புக்க வேல், அவ்விலங்கும் புத்தேளிரே, என்று இராமன் கூறி மனையின் மாட்சியைப் பாதுகாத்தல்பற்றி கூறுகிறார். மாதர்களுக்கு சுதந்திரம் உண்டு என்னும் சொல், நாரத ன் வீணையைப் போல கண்ணனின் குழலிசையைப் போல இன்ப மளிப்பதாக இருக்கிறது. வேதமே பொன்னால் ஆன அழகிய கன்னிகையாக வருவதைப் போல் இருக்கிறது. அமரத்தன்மையை அளிக்கும் அமிழ்தத்தைப் போல் அமைந்திருக்கிறது, என்று பாரதி கூறுகிறார். பெண்ணை அடிமைப்படுத்த நினைப்பவர் மாய்ந்துவிட்டார் என்று | lாரதி எதிர்காலத்தை கணித்துக் கூறுகிறார். "ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்று எண்ணியிருந்தவர் மாய்ந்து விட்டார், வீட்டிற்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போம் என்ற விந்தை மனிதர்த்லை கவிழ்ந்தார் 11:41றும், "கற்புநிலையன்ெறு சொல்லவந்தால் இரு கட்சிக்கும் அ.து பொதுவில் வைப்போம் வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும் வழக்கத்தைத் தள்ளிமிதித்திடுவோம்" என்றும் பாரதி கும்மியடிக்கக் கூறுகிறார். "அறிவு கொண்ட மனித உயிர்களை அடிமை யாக்கமுயல்பவர் பித்தராம்" என்றும்