பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 41 "இன்று கட்டுண்டோம், பொருத்திருப்போம் காலம் மாறும், தருமத்தை அப்போது வெல்லக்காண்போம், தனுவுண்டு காண்டிவம் அதன்பேர் என்றான் என்று பாஞ்சாலி சபதத்தில் பார்த்தன் கூறியதை பாரதி குறிப்பிடுகிறர் அர்ஜூனன் தனது காண்டிவத்தைக் கொண்டு உலகத்தையே வெல்வதற்கான வல்லமையைப் பெற்றவன். அத்தகைய வெற்றிக்குரிய விரத்தோள்கள் பாரத தேவியின் தோள்களாகும். அதையே "காண்டிவமேந்தி உலகினை வென்றது. கல் ஒத்ததோள் எவர்தோள்? - எம்மை ஆண்டருள் செய்பவள், பெற்று வளர்ப்பவள் ஆரியர் தேவியின் தோள்" என்று பாரதி பாடுகிறார். பாரதக் கதையில் கருணன் ஒரு மிக முக்கியமான பாத்திரமாகும். கர்ணன் ஈடு இணையில் லாத மாவீரன், வீரத்திலும் தீரத்திலும் மிகச்சிறந்தவன். பயம்என்பதை அறியாதவன்தானதருமங்களில் அவனுக்கு நிகர் அவனே. நட்பிற்கு இலக்கணமானவன். கொடையில் சிறந்தவன் கன்னனோடு கொடை போயிற்று என்று புகழ் பெற்றவன். கால வசத்தால், சூழ்நிலையின் கட்டாயத்தால் கர்ணன் துரியோதனன் பக்கம் நின்றான். ஆயினும் கர்ணன் சகல துறைகளிலும் தனித்தன்மை பெற்ற வன். போற்றுதலுக்குரியவன். பாரதி கர்ணனின் சிறப்பை தனது பாடல்களில் பல இடங்களிலும் மிகவும் சிறப்பித்துக் கூறுகிறான். கர்ணனுடைய சீரிய சிறப்புகளில் முதன்மை பெற்று நிற்பது அவனுடைய கொடைச் சிறப்பு. பாரதி தனது பாஞ்சாலி சபதத்தில் துரியோதனன் சபையில் இருந்த பல பெரியோர்களையும் குறிப்பிட்டுக் கூறிவிட்டு கர்ணன் அங்கு இருந்ததையும் கீழே கண்ட்வாறு குறிப்பிடுகிறார். "மைந்நெறிவான் கொடையான்-உயர் மானமும் வீரமும் மதியும் உளோன் உய்ந்நெறியறியாதான் - இறைக் குயிர் நிகர்கன்னனும் உடனிருந்தான்" இங்கு கர்ணனை சிறப்பித்து பாரதி குறிப்பிடுவதைக் காணலாம்.