பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 48 விடுவார்களோ என்னும் அச்சத்தைப்போக்க, தான் திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்று விரதம் பூண்டு தியாகத்தின் சின்னமாக விட்டுமன் என்னும் பெயர் பெற்று பிதாமகனாக அத்தினாபுரத்தைத்தன் பலத்தால் காத்து நின்றான். விட்டுமன் யாராலும் வெல்ல முடியாத வல்லமை பெற்றவன். சகல கலைகளையும் கற்றவன். வில்வித்தைகளிலும் போர்ப் பயிற்சியிலும் தேர்ச்சிப்பெற்றவன். மகாரதன், அதிரதன். தான் விரும்பும் போது தான் மரணம் ஏற்படும் என்னும் சாகாவரம் பெற்றவன். அரசியல் நெறி, ராஜ நீதி நன்கு கற்றவன், எனினும் தனக்கென எதுவும் இல்லாமல், தன தந்தைக்காக தனது சகோதரர்களுக்காக, தனது சகோதரர்களின் பிள்ளைகளுக்காக நாட்டிற்காக, அத்தினாபுரத்தின் நலனுக்காக தனது வாழ்நாட்களை அர்ப்பணித்தவன். திருமணமே செய்து கொள்ளாமல் தியாகம் செய்து தனியாக வாழ்ந்தவன். இத்தகைய தியாக சீலர்கள் பாரத நாட்டில் பலர் உண்டு. அது பாரதத்தாயின் தியாக உள்ளம். "தந்தை இனிதுறத்தான் அரசாட்சியும் தையலர்தம் உறவும் - இனி இந்த உலகினில் விரும்புகிலேன் என்ற தெம்மனை செய்தவுள்ளம்" என்று பாரதி பாடியுள்ளான். உலகின் துன்ப துயரங்கள் தீர அன்பு வழியொன்றே வழி என்பது புத்தன் மொழியாகும். "பூரண ஞானம் பொலிந்த நன்னாடு புத்தர்பிரான் அருள் பொங்கிய நாடு" என்று பாரதி மற்றொரு இடத்தில் பாடுவதைக் காண்கிறோம். மகாபுத்தனின் அன்பு மொழியும் அருள் மொழியும் பாரத தேவியின் மொழியாகும். "அன்புசிவம் உலகத்துயர் யாவையும் அன்பினிற் போகுமென்றே - இங்கு முன்புமொழிந்துலகு ஆண்ட தோர்புத்தன் மொழி எங்கள் அன்னை மொழி" என்று பாரதி கூறுகிறார்.