பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 49 மிதிலையை ஆண்ட சனகன் மதியூகம் மிக்கவன். ராஜரிஷி என்னும் பட்டம் பெற்றவன். சகல வேதங்களையும் சாத்திரங்களையும் கற்றவன் சனகன் மதிபாரத தேவியின்மதி என்று பாரதி கூறுகிறான். "மிதிலை எரிந்திடவேதப் பொருளை வினவும் சனகன் மீதி - தன் மதியினில் கொண்டதை நின்று முடிப்பது வல்ல நம் அன்னை மதி" என்று பாரதி தனது கவிதையில் கூறுகிறார் கவிதையில் புகழ்பெற்றது காளிதாசன் கவிதை. காளிதாசன் கவிதை மீது மீளாத பற்று கொண்டவர் பாரதி. கற்றாரைக் கற்றாரே காமுறுவர். காளிதாசன் உலக மகா கவிகளில் ஒருவன் எனப் புகழ்பெற்றுள்ளான். காளிதாசனைப் பற்றிப் பல இடங்களிலும் பாரதி பெருமையுடன் குறிப்பிடுகிறார். காளிதாசனின் "சாகுந்தலம்" அமர காவியம் "கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும், காளிதாசன் கவிதை புனைந்ததும்" என பாரதி தனது சுயசரிதைப் பாடல்களில் குறிப்பிடுகிறார். "தெய்வீக சாகுந்தலம் என்னும் நாடகம் செய்ததது எவர்கவிதை - அயன் செய்வதனைத்தின் குறிப்புணர் பாரத தேவி அருட்கவிதை" என்று பாரதி பாடுகிறார். பாரத தேவியின் பன்முகம் கொண்ட பெருவடிவத்தை பாரதி தனது கவிதையில் வடித்துக் காட்டுகிறார். பாரதத்தாயின் வீரம், மந்திரபலம் அறிவாற்றலை வெளிப்படுத்தும் கைத்திறன் சீரிய சொற்கள் ஒளிமிக்க பிள்ளைகளைப் பெற்றவயிறு காண்டிவம் ஏந்திய தோள், தியாக உள்ளம், அன்பு மொழி, யூகமதி, கவிதைத்திறன் இவையனைத்தும் பாரத தேவியின் பண்பாட்டு தளத்திலிருந்து எழுந்தவை. அந்த வழியில் "முன்னைப் பார்த்தன் கண்ணன் இவர் நேராஎன்னை உய்யக் கொண்டருளவேண்டும் - அடி உன்னைக் கோடி முறைதொழுதேன்-இனி வையத்தலைமை எனக்கருள்வாய் என்று பார்த்தன்,கண்ணன் வழியில் உலகத்தின் தலைமை எனக்கு வேண்டும்