பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் "சந்திரன் சோதியுடையதாம்-அது சத்திய நித்திய வஸ்துவாம் - அதைச் "சிந்திக்கும் போதினில் வந்துதான்-நினைச் சேர்ந்து தழுவியருள் செயும் - அதன் மந்திரத்தால் இவ்வுலகெலாம் - வந்த மாயக் களிப்பெருங்கூத்துக் காண்- இதைச் சந்ததம் பொய் யென்று உரைத்திடும் - மடச் சாத்திரம் பொய் யென்று தள்ளடா என்று கூறுகிறார் "ஆதித்தனிப்பொருள் ஆகுமோர்-கடல் ஆரும் குமிழி உயிர்களாம் - அந்தச் சோதி அறிவென்னும் ஞாயிறு - த்ன்னைச் சூழ்ந்த கதிர்கள் உயிர்களாம் - இங்கு மீதிப் பொருள்கள் எவையுமே - அதன் மேனியில் தோன்றிடும் வண்ணங்கள் - வண்ண நீதியறிந்தின்பமெய்தியே - ஒரு நேர்மைத் தொழிலில் இயங்குவார் என்று பாடுகிறார். "சோதியறிவில் விளங்கவும் - உயர் சூழ்ச்சி மதியில் விளங்கவும் - அற நீதி முறை வழுவாமலே - எந்த நேரமும் பூமித் தொழில் செய்து --கலை ஒதிப்பொருளியல் கண்டு தாம் - பிறர் உற்றிடும் தொல்லைகள் மாற்றியே - இன்ப மோதிவிழிக்கும் விழியினார் - பெண்மை மோகத்தில் செல்வத்தில் கீர்த்தியில்"- என்றும், "ஆடுதல் பாடுதல் சித்திரம் - கவி யாதி இனைய கலைகளில் - உள்ளம் ஈடுபட்டென்று நடப்பவர் - பிறர் ஈனர் நிலை கண்டு துள்ளுவார் - அவர் நாடும் பொருள்கள் அனைத்தையும் - சில நாளினில் எய்தப் பெறுகுவார் - அவர் காடு புதரினில் வளரினும் - தெய்வக் காவன மென்றதைப் போற்றலாம்" என்றும், __ "ஞானியர் தம்மியல் கூறினேன்-அந்த ஞானம் விரைவினில் எய்து வாய் - எனத் தேனிலின் இனிய குரலிலே - கண்ணன் செப்பவும் உண்மைநிலை கண்டேன் - பண்டை ஈன மனிதக் கனவெல்லாம் - எங்ங்ண் ஏகி மறைந்தது கண்டிலேன் - அறி