பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 68 கண்ணம்மாபாரதியின் குலதெய்வம். பாரத நாட்டின் குலதெய்வம். பொன்னை, உயர்வை, புகழை, விரும்பிடும் என்னைக் கவலைகள் நெருங்காமல் காப்பாற்றுவாயாக என்று எனது நெஞ்சத்தில் புகுந்துள்ள மிடிமையையும் அச்சத்தையும் கொன்று ஒழித்திடுவாய் என்றும் துன்பம் இனி இல்லை, சோர்வில்லை, தோல்வியில்லை அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட வேண்டும் என்றும் நல்லது நாட்டுக, தீமையை ஒட்டுக என்றும் வேண்டி பாரதி தனது குலதெய்வத்திடம் சரணடைகிறார். புன்னாக வராளி ராகத்தில் பாரதி தனது குல தெய்வத்தை நோக்கிப் பாடும் இந்த அருமையான பாடலை பாரதநாடு முழுவதிலும் விடுதோறும் நாள்தோறும் பாட வேண்டிய பாடலாகும். 1. "நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன் 2. பொன்னை உயர்வைக் புகழை விரும்பிடும் என்னைக் கவலைகள் தின்னத்தகாதென்று (நின்னை) 3. மிடிமையுமச்சமும் மேவி என்நெஞ்சில் குடிமைபுகுந்தன கொன்றவை போக் கென்று (நின்னை) 4. தன்செயல் எண்ணித்தவிப்பது தீர்ந்திங்கு நின் செயல் செய்து நிறைவு பெறும் வணம் (நின்னை) 5. துன்பமில்லை சோர்வில்லை தோற்பில்லை அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட (நின்னை) 6. நல்லது தீயது நாமறியோம் அன்னை நல்லது நாட்டுக தீமையை ஒட்டுக (நின்னை) என்று பாடி கண்ணன் பாட்டுத் தொகுப்பை பாரதி நிறைவுச் செய்கிறார். பாஞ்சாலி சபதத்தில் பாரதி: தமிழ்சாதிக்குப் புதியவாழ்வுதர வேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கும் பராசக்தியே என்னை இத்தொழிலில் தூண்டினாள் என பாஞ்சாலி சபதக்காவியத்தைப் பாடத்தொடங்குகிறார் பாரதி. அடிமைப்பட்ட பராசக்தி தனது அடிமை விலங்குகளை உடைத் தெரியத் தனது மக்களைத் தூண்டுவதற்காக இந்த சபதம் என்று கருத்தில் கொண்டு பாரதி பாஞ்சாலி சபதத்தைப் பாடுகிறார்.