பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 69 பாரதப் பெருங்கதையின் தெய்வீகப் பாத்திரங்களெல்லாம் இக்கதையில் வருகின்றனர். பிரம்மஸ்துதியும் சரஸ்வதி வணக்கமும் வாணியை வேண்டுதலும் பராசக்தி வணக்கமும் மீண்டும் சரஸ்வதி வணக்கமும் பாஞ்சாலி சபத நூலில் பாரதி பாடும் கடவுள் வாழ்த்துப் பாடல்களாகும். "ஒம் எனப் பெரியோர்கள் - என்றும் ஒதுவதாய் வினைமோதுவதாய் தீமைகள் மாய்ப்பதுவாய் - துயர் தேய்ப்பது வாய்நலம் வாய்ப்பது வாய்" என்ற பிரம்மஸ்துதி பாடலைத் துவக்குகிறார். பாஞ்சாலி சபத காவியத்தில் மூன்று தொடக்கங்களில் வாணியை வேண்டுகிறார். கதையின் தொடக்கத்தில் சரஸ்வதி வணக்கம். அதில் வாணியை உருவகப்படுத்துகிறார். அவளுடைய கண்கள் வேதங்கள் அவ்வேதங்களுக்கு பல உரைகள் எழுதப்பட்டுள்ளன. அவ்வுரைகளே அவளுடைய க்ண்களில் இட்ட கருமை. அவளுடைய நுதல்கள் மதியின் கதிர்வீச்சுகள். அவளுடைய நீண்ட கூந்தல் சிந்தனைச் செல்வம். வாதங்களும் தருக்கங்களும் அவளுடைய செவிகள். துணிவே அவளுடைய செவிகளில் அணிந்துள்ள தோடுகள். அவளுடைய நாசிகளே போதமாகும். அவளுடைய வாய் பொங்கிவரும் பல சாத்திரங்களாகும். கற்பனையென்னும் தேன் சுவையான இதழ்களையும் சுவையான காவியங்களைப் போன்ற கொங்கைகளையும் சிற்பம் முதலிய பல கலைத்திறன்களையும் உடைய கைகளையும் கொண்டவள். சொல் நயம் அறிந்த இசைத் தொகுப்புகளின் சுவையறிந்த தமிழ்ப்புலவர் என்னும் மேலோர்களின் நாவே அவளுடைய மலர்ப்பதங்கள் இதுவே பாரதியினுடைய சரஸ்வதியின் அற்புத வடிவம். "வேதத் திருவிழியாள் - அதில் மிக்க பல்லுரையெனும் கருமையிட்டாள் சீதக் கதிர்மதியே - நுதல் சிந்தனையே குழல் என்றுடையாள் வாதத்தருக்கமெனும் - செவி வாய்ந்த நற்றுணிவெனும் தோடணிந்தாள் போதமென்னாசியினாள் - நலம் பொங்குபல் சாத்திரவாயுடையாள்" என்றும்