பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 76 _உலகில் தர்மக் குழப்பம் ஏற்படும்போது எவ்வாறு தெய்வக் குழப்பம் ஏற்படுகிறது என்பதை ஏதாவது கொடுமை நிகழும்போது "கடவுளுக்கு கண் இல்லையா" என்று சாதாரணமக்கள் கூறுவதை, கவிஞன் தனது மகா சக்தி நிறைந்த கவித்திறனால்அற்புதமான கவிதை வரிகளில் உலகையும் உலக மக்களையும் விழிப்படையச் செய்யும் நோக்கோடு இந்த வரிகளை மனம் நொந்து எடுத்துக் கூறுகிறான். பாரதியின் அந்த வன்மை மிக்க வரிகளைக் கேளுங்கள். "தருமம் அழிவெய்தச்சத்திய மும்பொய்யாக, பெருமைத்தவங்கள் பெயர் கெட்டு மண்ணாக, வானத்துத் தேவர் வயிற்றிலே தீப்பாய, மோன முனிவர் முறைகெட்டுத் தாமயங்க, வேதம் பொருளின்றி வெற்றுரையேயாகிவிட, நாதம் குலைந்து நடுமையின்றிப் பாழாக, கந்தருவரெல்லாம் களையிழக்கச் சித்தர்முதல் அந்தரத்து வாழ்வோர் அனைவோரும் பித்துறவே, நான் முகனார் நாவடைக்க, நாமகட்கு புத்திகெட, வான்முகிலைப் போன்ற தொரு வண்ணத்திருமாலும் அறிதுயில் போய் மற்றாங்கே ஆழ்ந்த துயிலெய்திவிட செறிதரு நற் சீரழகு செல்வமெலாந்தானாகுஞ் சீதேவி தன் வதனம் செம்மை போய்க் காரடைய மாதேவன் யோகம் மதிமயக்கமாகி விட வாலை, உமாதேவி, மாகாளி, விறுடையாள். "மூலமாசக்தி யொரு மூவிலை வேல்கையேற்றாள் மாயை தொலைக்கு மகாமாயை தானாவாள், பேயைக் கொலையைப் பிணக்குவையைக்கண்டுவப்பாள் சிங்கத்திலேறிச் சிரிப்பால் உலகழிப்பாள் சிங்கத்திலேறிச்சிரித்தெவையும் காத்திடுவாள், நோவுங்கொலையுறுவலொனாப்பீடைகளும் சாவுஞ்சலிப்பு மெனத்தான் பல் கனமுடையாள் கடர்வெறுமையேறுங்கரு நிறத்துக் காலனார் இடாது பணி செய்ய இலங்கு மகாராணி மங்களஞ்செல்வம் வளர்வாழ்நாள் நற்கீர்த்தி துங்கமுறுகல்வியெனச் சூழும் பல்கணத்தால் ஆக்கந்தானாவாள், அழிவு நிலையாவாள், போக்குவர வெய்தும் புதுமை யெலாம் தானாவாள். மாறிமாறிப் பின்னு மாறிமாறிப் பின்னும் மாறிமாறிப்போம் வழக்கமே தானாவாள் ஆதி பராசக்தி - அவனைஞ்சம் வண்மையுற