பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 77 சோதிக்ககதிர்விடுக்கும் சூரியனாம் தெய்வத்தின் முகத்தேயிருள் படர." என்பது பாரதியாரின் சிறப்புமிக்க நீண்ட கவிதைவரிகளாகும். உலகில் அக்கிரமங்களும் அநியாயங்களும் அதிகரிக்கும் போது ஆண்டவனை நிந்தித்துப்பாடுவதும் பக்தியின் சிகரங்களில் ஒன்றாகும். பாரதியின் இந்த பாணி தனிச்சிறப்பாக வடிவம் பெற்றுத் திகழ்வதைக் காண்கிறோம். ஒரு இடத்தில், ஒரு ஊரில், ஒரு நாட்டில் அக்கிரமங்களும் அநியாயங்களும், கொடுமைகளும் நடக்கும்போது அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பது கண்டனத்துக்குரியதாகும்.அது கோழைத்தனம் அதைக் கவிஞன் சாடுகிறான். அரசன் தவறு செய்யும்போது அதை இடித்துரைப்பது, சுட்டிக்காட்டித் திருத்துவது என்பது நமது நாட்டின் ராஜ நீதியின் அரசியல் இலக்கணத்தின் நெறியாகும். | சீதையை இராவணன் கவர்ந்துக் கொண்டு செல்லும்போது அதைக் கண்ட ஜடாயு, அரக்கனை எதிர்த்துப் போரிட்டான். இராவணனுடைய செய்கையை அவனுடைய தாய் வழிப்பாட்டனான மாலியவானும், "வேறு ஒரு குலத்தோன் தேவியை நயந்து சிறைவைத்த செயல் நன்றோ? பாவியர் கூறும்பழி, இதின்பழியும் உண்டோ?" என்று கூறுகிறான். துரியோதனன் ஆணையிட அவன்தம்பி துர்ச்சாதனன் பாஞ்சாலி இருந்த இடத்திற்குச் சென்று அவளுடைய ஆட்சேபணைளையுைம் பொருட்படுத்தாமல் அவள் பக்கத்தில் சென்று அவளுடைய கூந்தலினைப் பற்றிஅத்தினாபுரத்துத் தெருக்களின் வழியாக கரகர வென இழுத்துச் சென்ற பொழுது "ஊரவர் என்ன கொடுமையிது" என்று கூட்டமாக நின்று வேடிக்கைதான் பார்த்தனர் என்று பாரதி கடும்கோபத்துடன் அத்தினாபுரத்து மக்களை திட்டுகிறான். அந்தக் கொடுஞ்செயல் புரிந்த துர்ச்சாதனனைத்தடுத்து அவனை மிதித்துக் தள்ளி விட்டுப் பாஞ்சாலியை அந்தப்புரத்தில் கொண்டு போய்ச் சேர்க்காமல் அத்தினாபுரத்துத் தெருக்களில் கூடியிருந்த மக்கள், நெட்டை மரங்களைப் போல் நின்று, பெட்டைப் புலம்பல் புலம்பினர் என்றும் விரமிலா நாய்கள் என்றெல்லாம் கடுஞ்சொற்களில் பாரதி சாடுகிறான். "ஐயகோ வென்றே அலறியுணர்வற்றுப் பாண்டவர்தம் தேவியவள் பாதியுயிர் கொண்டுவர, நீண்ட கருங்குழலை நீசன் கரம்பற்றி,