பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 82 சபையில் வேறு பலரும் இருந்தனர். அறிவுடையோர், நல்லோர், வேள்வித்தவம் புறிந்த வேதியர்கள், மேலோர் மற்றும் பலரும் இருந்தனர். அவர்களை நோக்கி முறையிட்டாள். அவர்களும் மெளனமாகவே அமர்ந்திருந்தனர். "விம்மியழுதாள் - விதியோ கணவரே. அம்மிமிதித்தே யருந்ததியைக் காட்டி யெனை, வேதச் சுடர் திமுன் வேண்டிமணம் செய்து பாதகர் முன் இந்நாள் பரிசழிதல் காண்பிரோ என்றான். விஜயனுடனேறுதிறல் வீமனுமே குன்றாமணித்தோள் குறிப்புடனே நோக்கினார். தர்மனுமற்றாங்கே தலை குனிந்து நின்றிட்டான்" என்று கவிஞன் கண்கலங்கிக் கூறுகிறார். "பொருமியவள் பின்னும் புலம்புவாள் - வான் சபையில் கேள்விபலவுடையோர், கேடிலாநல்லிண்சயோர், வேள்விதவங்கள் மிகப்புரிந்த வேதியர்கள் மேலோர் இருக்கின்றிர், வெஞ்சினமன்ெ கொள்கிலிரோ? என்று கேட்டாள். கூடியிருந்த வேந்தர் பலரும் கட்டுண்டு வாய் மூடியிருந்தனர். "வேலோரெனையுடைய வேந்தர் பிணிப்புண்டா" என்று பாரதி குறிப்பிடுகிறார். இவர்களையெல்லாம் சொல்லிக்குற்றமில்லை. மன்னர்சபை தனி ல் எ ன் னை ப் பிடித்து இழுத்து ஏச்சுக்க ள் பல சொல் லி அவமானப்படுத்துவதைப் பார்த்து உன்னை" நிறுத்தடா என்று சொல்லுவதற்கு யாருமில்லையே என்ன செய்வேன்" என்று துடித்துக் கொண்டே பாஞ்சாலி தன் கணவன் மாரை நோக்கினாள். "இங்கவர்மேல் குற்றமியம்ப வழியில்லை, சபைதனிலே என்னைப் பிடித்திழுத்தே ஏச்சுக்கள் சொல்லுகிறாய் நின்னையெவரும் "நிறுத்தடா என்பதிலர். என்செய்வேன் என்றேயிரைந்தழுதாள் பாண்டவரை மின்செய்கதிர் விழியால் வெந்நோக்கு நோக்கினாள் மற்றவர்தா முன் போல் வாயிழந்து சீர்குன்றி பற்றைகள் போல் நிற்பதைப்பார்த்து வெறி கொண்டு தாதியடி தாதி யெனத்துச் சாதனன் அவளைத் தி.துரைகள் கூறினான் கர்ணன் சிரித்திட்டான் *. சகுனி புகழ்ந்தான் சபையோர் விற்றிருந்தார்" என்று பாரதி குறிப்பிடுகிறார்.