பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 87 கருமத்தைமேன் மேலும் காண்போம் - இன்று கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும் தருமத்தையப் போது வெல்லக்காண்போம் தனுவுண்டு காண்டிவம் அதன்பேர் என்றான். இங்கு வீமனின் கோபத்தியும் வில் விஜயனின் தர்மநிதியும் இணைந்து ஒரு புதிய அறத்தின் எழுச்சிக்குரலை எழுப்பியிருக்கிறது. அதன் முடிவில் காண்டிபத்தின் நாண் ஒலி கேட்பதைக் காணலாம். பாரதியின் இந்த கவிதைக்குரல் காலம் காலத்திற்கு ஒலிக்கும் தர்மக்குரலாகும். பாரதியின் இந்த அற்புதமான அபூர்வமான கவிதைவரிகள் அமரத்வம் வாய்ந்த வரிகளாகும். பாஞ் சாலி யி ன் அழு குரல் சபையில் மேலும் சலனத்தை உண் டாக் கி ற் று. அர்ஜ ன ரிை ன் வீர வார்த் தை க ள் விம ைன அமைதிப்படுத்திற்று. சினம் தணிந்து வீமன் அண்ணனை வணங்கி நின்றனன். அப்போது விகர்ணன் எழுந்தான். விகர்ணன் நூற்றுவரில் ஒருவன். நூறு பேரில் தொண்ணுாற்று ஒன்பது பேர் பொல்லாதவர்கள் இருந்தாலும் ஒருவனாவது நல்லவனாக இருப்பான் என்பதற்கு உதாரணமாக கெளரவர் கூட்டத்தில் விகர்ணன் இருந்தான். விகர்ணன் வயதில் இளையவன். ஆயினும் அறத்தால் நிற்பவன். துரியோதனன் சபையிலும் துணிவுடன் நியாயத்தை எடுத்துக் கூறும் பண்பும் விவேகமும் மிக்கவன். சபையில் நடந்த வாதத்தில் பிதாமகர் கூறிய சொற்களுக்கு மறுப்புக் கூறி நீதியை எடுத்துரைத்து விகர்ணன் எச்சரிக்கை செய்கிறான். இதைப் பாரதி மிகவும்.அழகாக விவரித்துக் கதையைக் கொண்டு செல்கிறார். "அப்போது விகர்ணன் எழுந்து அவைமுன் சொல்வான் பெண்ணரசி கேள்விக்குப் பாட்டன் சொன்ன பேச்சதனை நான் கொள்ளேன் பெண்டிர்தம்மை எண்ணமதில் விலங்கெனவே கணவர் எண்ணி ஏதெனிலும் செய்திடலாமென்றான் பாட்டான் வண்ணமுயர் தேவ நெறிமாறிப் பின்னாள் வழங்குவதிந் நெறியென்றான் வழுவே சொன்னான். எந்தையர்தம் மனைவியரை விற்றதுண்டோ? என்னும் கேள்வியை எழுப்புகிறான். "இது காறும் அரசியரைச் சூதில் தோற்ற விந்தையைநீர் கேட்டதுண்டோ? என்னும் கேள்வியை மேலும் கேட்டுத்தன் கருத்தைத் தொடர்ந்து கூறுகிறான்.