பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 88 "------விலை மாதர்க்கு விதித்ததையே பிற்கால நீதிக்காரர் சொந்தமெனச்சாத்திரத்தில் புகுத்திவிட்டார்! சொல்லளவேதானாலும் வழக்கந்தன்னில் இந்த விதம் செய்வதில்லை, சூதர் வீட்டில் ஏவற்பெண் பணயப் மில்லையென்றும் கேட்டோம் என்று ക്കി மேலும் தொடர்ந்து "தன்னையிவனி முந்தடி மையான பின்னர்த் தாரமேது? விடேது? தாதனான பின்னயு மோருடைமையுண்டோ என்று நும்மைப் பெண்ணரசி கேட்கின்றாள், பெண்மை வாயால் என்று பாஞ்சாலி கிளப்பிய வாதத்தை மீண்டும் அதற்கான பதிலையும் உள்ளடக்கியகேள்வியாக விகர்ணன் சபையில் கூடியிருந்த மன்னர்களை நோக்கி சுட்டிக் காட்டி மேலும் தொடர்கிறான். "மன்னர்களே களிப்பதுதான் சூதென்றாலும் மனுநீதி துறந்திங்கே வலியபாவந் தன்னையிருவிழி பார்க்க வாய் பேசிரோ? தாத்தனே நீதியிது தகுமோ என்றான்" என்று மன்னர்களிடமும் தனது தாத்தனான நீதி அறிந்த பிதாமகர் விட்டுமனிடமும் சுடச்சுடக் கேள்விகளை அடுக்கிக் கேட்டான் விகர்ணன் இந்த நியாய வாதங்களை எடுத்துக் கூறியவுடன் சபையில் சிறிய சலசலப்பு ஏற்பட்டது. "எழுந்திட்டார் சில வேந்தர் இரைச்சல் இட்டார் ஒவ்வாது சகுனி செய்யும் கொடுமை யென்பார் ஒரு நாளும் உலகி தனை மறக்காதென்பார் எவ்வாறு புகைந்தாலும் புதைந்து போவிர் ஏந்திழையை அவைக்களத்ததே இகழ்தல் வேண்டா செவ்வானம் படர்ந்தாற்போல் இரத்தம் பாயச் செருக்களத்தே திருமடா பழியி...தென்பார்" என்று மகாபாரதப் போருக்கான முன் எச்சரிக்கை எழுந்தது. எனினும் கொடுமை தொடர்ந்தது. அண்ணன் ஆணைப்படி "துச்சாதனன் எழுந்தே - அன்னை துகிலினை மன்றிடை புரியலுற்றான்" அக்கிரமத்தின் சிகரமாக அவலத்தின் உச்சமாக துகிலுறிதல் கொடுமை சபை நடுவில் தொடங்கியது.