பக்கம்:பாரம்பரியம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓங்கி நிற்றல் வாசகர்களின் மனதிலே ஒரு சந்தேகம் தோன்றி யிருக்கலாம். வெள்ளைப் பூ, சிவப்புப் பூக்களையுடைய அந்தி மல்லிகைகளைக் கலப்பினச் சேர்க்கை செய்தால் வெண் சிவப்புப் பூவைத் தரும் அந்தி மல்லிகை உண்டாகிறது; ஆனல் வெள்ளெலியையும் கா.ொலியையும் கலப்பின மாக்கி ல்ை வெண்மைக்கும் கருமைக்கும் இடையிலுள்ள கிற முள்ள குட்டி பிறக்கவில்லையே? கருமை கிறக் குட்டிதானே தோன்றுகிறது ? இம்மாதிரியான வித்தியாசமேற்படுவா னேன் என்று ஐயம் உண்டாகலாம். இங்கு ஒரு விஷயத்தை நாம் தெரிந்துகொள்ள வேண் டும். நிறத்திற்குக் காரணமான ஜீன்க்ள் ஒரே மாதிரியான தன்மையோடிருப்பதில்லை. அங்கி மல்லிகையில் நிறத்திற் கான ஜீன்கள் ஒரே அளவான சக்தியைப் பெற்றிருக்கின் நன. வெவ்வேறு நிறமுள்ள இரு ஜீன்கள் வந்து சேரும் போது அவை இாண்டின் அம்சங்களும் புதிய பூவில் சம மாக வெளிப்படுகின்றன. ஆனல் எலிகள் விஷயத்தில் அவ்வாறு ஏற்படுவதில்லை. எலியிலே கருமை நிறம் இங்கி (Dominant) நிற்கிறது. அது வெண்மை நிறத்தை மறைத்துவிடும் சக்தி வாய்ந்ததாகக் காண்கிறது. அதனல் தான் கலப்பினச் சேர்க்கையில் காரெலிகளே தோன்று கின்றன. காசெலியில் நிறத்திற்குரிய கிறக்கோல்களே கக என்று குறிப்பிடுவோம். அதே போல வெள்ளெலியில் உள்ளவற்றை வெவெ என்று குறிப்பிடுவோம். கலப்பினச் சேர்க்கையால் உண்டான எலியின் கிறக் கோல்களில் கருமை, வெண்மை ஆகிய இரண்டிற்கும் உரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/52&oldid=820444" இலிருந்து மீள்விக்கப்பட்டது