பக்கம்:பாரம்பரியம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்மைகள் அமைதல் உடல் உறுப்புக்களின் பாரம்பரியத் தன்மைகளை அறிந்துகொள்வது ஒரளவு சுலபம்; ஆனல் மனத்தைப் பற்றி அவ்வளவு சுலபமாக அறிந்துகொள்ள முடியாது. அதிலே சிக்கல் அதிகமுண்டு. உடலமைப்பில் தெரியும் ஒற்றுமைகளைப்போல மன அமைப்பிலே எளிதாக ஒற்றுமை காணமுடியாது. காக்கை வலிப்பு, பைத்தியம் ஆகிய குறைபாடுகள் பாாம்பரியமாக வருகின்றன. சூழ்நிலையும் (Environment) இவற்றிற்குக் காரணமாக இருப்பதுண்டு. சாதாரண மான சில நோய்களும், தொற்று நோய்களும் எதிர் பாாாது ஏற்படும் விபத்துக்களும் காக்கை வலிப்புக்குக் காரணமாகின்றன. போதை வஸ்துக்களும், ஒழுங் கீனமான வாழ்க்கையும், எதிர்பாராத பெரிய அதிர்ச்சி களும் சித்தப் பிாமையை உண்டாக்கலாம். பாரம் பரியமாகவும் மேற்கூறிய நோய்கள் எ வ் வ - அ உண்டாகின்றன என்று இப்பொழுது கவனிப்போம். தாய் தந்தை இருவரும் மனத்திடம் அற்றவர்களாக (Feble minded) இருந்தால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் மனத்திடம் இல்லாமல் இருப்பார்கள்: சில குழந்தைகளுக்குக் காக்கை வலிப்பும் உண்டாக லாம். காடார்டு (Goddard) என்பவர் மனத்திடமற்ற பலரின் குடும்பங்களைப்பற்றி ஆராய்ச்சி சொய்தார். அவற் மில் இருந்த 470 குழந்தைகள் மனத்திடமற்றிருந்தன; ஆறு குழந்தைகளுக்கே அக் குறைபாடில்லை. பெற்றேர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/71&oldid=820466" இலிருந்து மீள்விக்கப்பட்டது