பக்கம்:பாரி வேள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரி வேள்

பறம்பு மலை

காற்று இனிமையாக வீசுகிறது. மரங்களில் மலர்கள் விரிந்து மணக்கின்றன. அந்த மணத்தைத் தாங்கிக்கொண்டு, தான் பெற்ற செல்வத்தைப் பிறருக்கும் அளிக்கும் வள்ளலைப்போல எங்கும் பரப்புகின்றது காற்று. கிளிகள் கீச்சுக்கீச்சென்று கத்துகின்றன. குயில்கள் கூவுகின்றன.

அடர்ந்த காடுதான் இது. ஆம் மனிதர் இயங்கும்படி இடையிடையே வழிகள் இருக்கின்றன. எங்கே பார்த்தாலும் பலா மரங்கள். கனிந்த பழங்கள் வெடித்து அவற்றிலிருந்து சாறு வழிந்து ஓடுகிறது. அந்தப் பழத்தைத் கண்டு தொட்டுத் தொட்டுப் பார்க்கிறது ஒரு குரங்கு தொட்ட விரலை நாவில் வைத்துக் கொள்கிறது. ஆ! அது குதிக்கிறதைப் பார்த்தால் அதற்குள்ள மகிழ்ச்சி நன்ருகப் புலனுகிறது. தன் கையால் பலாப்பழத்தின் வெடிப்பைப் பிளந்து - கனிந்த சுளைகளை எடுத்துத் தின்கிறது. இப்போது, அது கண்ணே முடிக் கொண்டபடியே பலாப்பழத்தின் சுவையை அநுபவிக்கிறது !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/10&oldid=958491" இலிருந்து மீள்விக்கப்பட்டது