பக்கம்:பாரி வேள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் நட்பு

கபிலர் பாரியின் இயல்புகளை நன்கு உணர்ந்து - கொண்டார். பறம்பு மலையில் இருந்த பாரீசன் திருக் கோயிலுக்குச் சென்று இறைவனைத் தரிசித்தார். பறம்பு மலைப் பரப்பை ஓரளவு கண்டு மகிழ்ந்தார். இயற்கை யெழிலக் கண்டு மகிழ்வது புலவர் இயல்பு: மற்றவர்களுக்கும் அந்த எழில் புலப்பட்டாலும் புலவர்கள் கண்டு மகிழும் முறையே வேறு. நாம் அவற்றின் வெளியழகையே ஊன்றிப் பார்ப்பதில்லை. கவிஞர்களோ இயற்கை யெழிலை நன்கு கண்டு துகர்ந்து அதனுடே ஆழ்ந்து தம்மை மறந்து நிற்பார். கள். பூவும் புனலும், மானும் மரையும், காடும் பொழி லும் அவர்களோடு பேசும்; பேசாமல் பேசும். அவற்றின் பேச்சை உணர்ந்துகொள்ளும் நுட்பமான இயல்பு கவிஞர்களுக்குத்தான் உண்டு. கணத்துக்குக் கணம் புதுமை பெற்றுப் பொலிவதாகக் கவிஞர்களுக்கு இயற்கை காட்சி அளிக்கும். மரத்தின் ஒவ்வோர் இலையும் கவிஞர்களின் கவிதையை மெளன. மொழி யிலே எழுதும் ஏடாக விளங்கும். ஒவ்வொரு பூவும் அவர்களுடைய கற்பனைக்கு மணம் ஊட்டும்; வண்ணம் தீட்டும். கல்லும் முள்ளுங்கூடக் கவிஞர்களின் பார்வையில் அழகு பெறும். o-o-o-o: .

ஆகவே, கபிலர் பறம்பு மலையின் பகுதிகளைக் கண்டபோது அங்குள்ள காட்சிகளில் சொக்கிப் போளுர் பொய்கைக் கரையில் பல நாழிகை நின்று அதன் அலைகளையும் ஆழத்தையும் நீரின் தெளிவையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/24&oldid=583842" இலிருந்து மீள்விக்கப்பட்டது