பக்கம்:பாரி வேள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 பாரி வேள்

கண்டார். துள்ளிக் குதிக்கும் மீன்களைக் கண்டார். பூத்திருக்கும் மலர்களைக் கண்டு முகம் மலர்ந்தார். சின்னஞ் சிறு சுனைகளைப் பார்த்து மகிழ்ந்தார். அவர் மதுரையில் வையை யாற்று வெள்ளத்தைப் பார்த்து மகிழ்ந்தவர்; அதில் காணுத தெளிவை இந்தச் சுனை களில் கண்டார். பெரிய குளங்களைக் கண்டவர்; அவற்றிற் காணுத இயற்கை யமைப்பை இவற்றில் கண்டார். பல பூம்பொழில்களைப் பார்த்து மகிழ்ந்தவர்; அங்கே காணுத சிறப்பைப் பறம்பு மலைக் காடுகளில் கண்டார். அரண்மனையில் வளரும் மானையும் மயிலை யும் அவர் கண்டு களித்ததுண்டு; இங்கே தம் மனம் போனபடி துள்ளி விளையாடும் மானையும், தோகை விரித்து ஆடும் மயிலையும் கண்டு, சுதந்தர வாழ்வினுல் அவற்றிற்கு இயல்பாக அமைந்திருக்கும் வளப்பத்தை யும் ஆனந்தத்தையும் உணர்ந்து குதூகலித்தார். எங்கே பார்த்தாலும் அவர் புதுமைக் கோலத்தைக் கண்டார்; இயல்பாக வளரும் வளர்ச்சியைக்

கனடாா. * . * : - ... . - . * w

வேங்கை மரமும் சந்தன மரமும் அவர் உள்ளத் திலே பெருமிதத்தை உண்டாக்கின. பழங்கள் கொத்துக் கொத்தாகத் தொங்கும் பலா மரங்களைக் கண்டபோது அவருக்கு இன்பம் ஊறியது. மூங்கிலின் உயரத்தைக் கண்ணுல் அளந்தார். சுனைகளின் ஆழத்தைக் கருத்தால் அளந்தார். .

எல்லாவற்றையும் தனக்கு உரியவையாகப் பெற்ற பாரியின் குணங்களில் கபிலர் மூழ்கித் திளைத்து மகிழ்ந்து உருகினர். ... . . . . . .

இரண்டு நாட்கள் அங்கே தங்கினர். மதுரைக்குச் செல்லவேண்டு மென்று விடை பெற்றபோது பாரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/25&oldid=583843" இலிருந்து மீள்விக்கப்பட்டது