பக்கம்:பாரி வேள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் கட்பு - 1?

விம்மினன். உயிரையே பிரித்துவிடும் கொடுமையை அப் பிரிவு உண்டாக்குமோ என்று அஞ்சின்ை. - பாண்டிய மன்னனுடைய அரசவை இங்கே இல்லை. நல்லிசைச் சான்ருேர் தமிழாராயும் சங்கமும் இல்லை. மாட மதுரை இங்கே இல்லை. இதனை நான் நன்கு உணர்கிறேன். இவ்வளவு சிறந்த நிலைக் களத்தில்தான் கபிலர் என்னும் ஒப்பிலா மாணிக்கத்தை வைத்துப் போற்ற வேண்டும் என்பதையும் நான் நன்ருகத் தெரிந்துகொண் டிருக்கிறேன். ஆளுல். ஆளுல். பாரியால் பேச முடியவில்லை.

'நீ என்ன சொல்லுகிருய்?' என்று கபிலர் அன்பு ததும்பக் கேட்டார். - - 'என்னுடைய அன்புக்கும் ஆசைக்கும் குறை வில்லை. ஆயினும் அவற்றைக் கொண்டு நான் ஈடு செய்ய முயல்வது பேதைமை. அவ்வளவு பெரிய இடத்தில் ஒளிரும் தங்களை இந்தச் சிறிய குன்றில் வைத்திருக்கவேண்டும் என்று ஏழையாகிய நான் ஆசைப்படுவது பேதைமையிலும் பேதைமை. ஆனல் ஏதோ ஒன்று என் உள்ளத்தில் கிளுகிளுக்கிறது. தேவரீருடைய கருணை இருக்குமால்ை இங்குள்ள குறைகளை யெல்லாம் நிரப்பிக்கொள்ளும் வாய்ப்பு நேரலாம் என்ற எண்ணம் ஏனே எனக்கு அடிக்கடி தோன்றுகிறது."

"பார்ப்போம். இறைவன் அருளின்படி எல்லாம் நடக்கும்' என்று சொல்லி விடை பெற்ருர் கபிலர்.

அடிக்கடி வரவேண்டும்" என்று யாவரும் வேண்டிக்கொண்டனர். அப்படியே செய்வேன்" என்று சொல்லி மதுரைக்குப் புறப்பட்டார் புலவர்.

2 - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/26&oldid=583844" இலிருந்து மீள்விக்கப்பட்டது