பக்கம்:பாரி வேள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 - பாரி வேள்

அங்கே போனது முதல் அவருக்கு ஒன்றுமே சுவைக்கவில்லை. பறம்பு மலையும் பாரியும் தம் உள் ளத்தைக் கொள்ளை கொண்டுவிட்டதை அவர் உணர லானர். விரைவில் மறுபடியும் பறம்பு மலைக்குப் போளுர், இப்படிச் சிலமுறை போய் வந்தார். ஒவ்வொரு முறையும் கபிலருக்கும் பாரிக்கும் இடையே தோன்றிய அன்பு முறுகியது; இறுகியது; வன்மை பெற்றது. அது நட்பாக மாறியது. இறுதியில் ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ இயலாது என்ற நிலை உண்டா யிற்று. இருவரும் ஒருங்கே கூடி வாழ்வதுதான் இருவருக்கும் இன்பம் பயக்கும் என்ற முடிவுக்கு வந்தனர் நண்பர் இருவரும். . . . - . . . . பாரிவேள் குறுநில மன்னன். அவன் தன் நாட்டை விட்டு மதுரைக்குச் சென்று வாழ்வது இய லாத செயல். ஆகவே, கபிலரே பறம்பு மலைக்கு வந்து வாழ முடிவு செய்தார். இந்த முடிவு மதுரையில் வாழ்வாருக்குத் துன்பத்தைத் தந்தாலும் பறம்புநாட் டினர் அமுதத்தைப் பெற்ற வானவரைப்போலக் களிக் கூத்தாடினர். பாரி தன் வாழ்வின் பயனைப் பெற்றவன் ஆளுன்

பாரியும் கபிலரும் ஒன்றுபட்டனர். பாரியின் ஆசிரியராகவும் அமைச்சராகவும் நண்பராகவும் அவைக்

களப் புலவராகவும் விளங்கலானர் கபிலர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/27&oldid=583845" இலிருந்து மீள்விக்கப்பட்டது