பக்கம்:பாரி வேள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லக்குத் தேர்

வளம் செறிந்த பறம்பு நாட்டில் அடர்ந்த காடு களும் இருந்தன. காடும் காடு சார்ந்த நிலமும் முல்லைத் திணை என்று பெயர் பெறும். மலையும் 10&ు சார்ந்த இடமும் குறிஞ்சித் திணையாகும், பாரியி னுடைய பறம்பு நாட்டில் குறிஞ்சி நிலமும் இருந்தது; முல்லை நிலமும் இருந்தது. பறம்பு மலையிலும் அதைச் சார்ந்த இடங்களிலும் குறிஞ்சி வளத்தைக் கண்டு மகிழலாம். வேறு இடங்களில் காடுகள் செறிந்த முல்லை வளத்தைக் காணலாம். . .

பாரிவேள் அவ்வப்போது தன் நாட்டு மக்களைக் கண்டு அளவளாவிவிட்டு வருவான். பறம்பு மலைப் பகுதிகளுக்குச் சென்று மலை வளம் கண்டு மகிழ்ந்து வருவான். அப்படியே காட்டு வளமும் கண்டு வருவதுண்டு. குறிஞ்சி நிலத்தில் வேங்கை மரமும் தேக்க மரமும் சந்தன மரமும் பலா மரமும் ஓங்கி வளர்ந்தன. குறிஞ்சி மலரும் காந்தள் மலரும் மலர்ந்தன. மானும் மரையும் கரடியும் சிறுத்தையும் பாய்ந்து ஓடின. அருவியும் சுனையும் நீரை உதவின. அவற்றையெல்லாம் கண்டு மகிழ்ந்தான் பாரி. தினக் கொல்லையிலும் வரகுத் தோட்டத்திலும் குறிஞ்சி நில மக்கள் உணவு விளைவித்தனர். அங்கே சென்று அவர்களுடைய முயற்சியைப் பாராட்டினன். குற வரும் குறத்தியரும் தொண்டகப் பறையை முழக்கி முருகனை வழிபட்டுக் குறிஞ்சிப் பண்ணைப் பாடிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/28&oldid=583846" இலிருந்து மீள்விக்கப்பட்டது