பக்கம்:பாரி வேள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 - பாரி வேள்

கூத்தாடினர்கள். அவர்களுடைய பக்தியைக் கண் வியந்தான். * > - -

இப்படியே முல்லை நிலத்துக்குச் சென்று அங் குள்ள காட்சிகளையும் கண்டான். அங்கே கொன்றை மரமும் குருந்த மரமும் வளர்ந்திருந்தன. முல்லை மல ரும் தளவமும் மலர்ந்து மணந்தன. காணுறு ஓடியது. பசுமாடுகள் நிரை நிரையாக மேய்ந்தன. அவற்றைக் கண்டு களித்தான். ஆயரும் ஆய்ச்சியரும் முல்லைப் பண்ணைப் பாடிக் கண்ணனை வழிபட்டு ஆடினர்கள். அவர்களுடைய ஆட்டத்தைக் கண்டு உவந்தான்.

தம்முடைய மன்னன் வரும்போதெல்லாம் அந் நாட்டு மக்கள் அவனைக் கண்டு அளவற்ற மகிழ்ச்சியை அடைந்தனர். தங்கள் நிலத்தில் விளைத்த பொருள் களைக் கையுறையாகக் கொணர்ந்து அளித்தனர். பாரி குடிமக்களுடைய நன்மை தீமைகளை அவ்வப்போது அறிந்து, செய்ய வேண்டியவற்றைச் செய்தான்.

காட்சிக்கு எளியளுகப் பழகினன். தாயைக் குழந்தை

- கள் அணுகுவது போலக் குடிமக்கள் பாரிவேளை

அணுகித் தம் குறைகளைத் தெரிவித்தார்கள். -

ஒரு நாள் காடு அடர்ந்த ஓரிடத்திற்குச் சென் ருன் பாரி, யாரையும் அழைத்துச் செல்லாமல் தான் மட்டும் தனியே சென்ருன். தேரை ஓட்டும் வலவன் மாத்திரம் உடன் இருந்தான். காட்டு நிலத்திலும் வழிகள் இருந்தன. ஆதலின் அவ்வழியே தேரைச். செலுத்தச் செய்தான். அவ்வாறு போய்விட்டு மீள் கையில் ஓர் அரிய நிகழ்ச்சி நடந்தது. அந்நிகழ்ச்சி

மக்கள் உள்ளத்தில் பதிந்து, புலவர்கள் பாடலிற்

புகுந்து பாரியை மற்ற வள்ளல்களினின்றும் வேறு பிரித்துக் காட்டும் அடையாளச் செயல் ஆகிவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/29&oldid=583847" இலிருந்து மீள்விக்கப்பட்டது