பக்கம்:பாரி வேள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக்குத் தேர் 21

தேர் திரும்பும்போது பிற்பகல் நேரம். கதிரவன் மேல் திசையில் இறங்கிக்கொண்டிருந்தான். பறம்பு மலையின் அடிவாரத்தை நோக்கித் தேர் போய்க் கொண்டிருந்தது முல்லை நிலத்தின் வழியே போகும் போது பாரி, தேரை நிறுத்து' என்று கூவினன். இருமருங்கும் உள்ள காட்சிகளை மெல்லப் பார்த்துக் கொண்டு சென்றமையால் தேர் மெல்லத்தான் சென்றது. இப்போது திடீரென்று தேரை நிறுத்தும் படி பாரி சொல்லவே, வலவன் நிறுத்தின்ை. பாரி வேள் தேரிலிருந்து இறங்கினன். -

அருகில் ஒரு முல்லைக்கொடி வளர்ந்திருந்தது; இளங்கொடி, நிறைய அரும்பு கட்டியிருந்தது. மாலை நேரம் வந்தால் குப்பென்று மலர்ந்துவிடும். பருவம் வந்த மட மங்கைபோல அது தள தளவென்று வளர்ந்திருந்தது. ஆளுல் அருகில் பற்றுக்கோடு ஒன் றும் இல்லாமல் அது காற்றில் அசைந்துகொண் டிருந்தது. தளர் நடை பழகும் குழந்தை தட்டுத் தடுமாறி வந்து கீழே விழும் நிலையில் இருப்பதுபோல அந்தக் கொடி தளர்ந்து நின்றது. குருடன் ஒருவன் கால் தளர்ந்து எதையேனும் பற்றிக் கொள்வதற்காக நாற்புறமும் கையால் வெறும் வெளியைத் துழாவுவது போல அந்தக் கொடி அசைந்தது. நடு வழியில் துணை யின்றி நிற்கும் கன்னிப் பெண்ணைப்போல அது அலைப் புண்டு நின்றது. மெல்லிய காற்றில் அது திரும்பித் திரும்பி அசைந்தது; வளைந்து நிமிர்ந்தது. அப்போது, வழியில் போவோரை எனக்குத் துணை புரிய வாருங்கள் என்று அழைப்பதுபோல இருந்தது.

அது ஒசிந்து தளர்ந்து கொழு கொம்பின்றி. அசைவதைப் ப்ாரி கண்டான். மக்கள். வருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/30&oldid=583848" இலிருந்து மீள்விக்கப்பட்டது