பக்கம்:பாரி வேள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 - . பார் வேள்

வதைக் கண்டு மனம் குழைந்து உடனே உதவி புரி யும் இயல்புடையவன் அவன். அது பெரிதன்று. விலங்கினங்கள் துன்புற்ருலும் காணச் சகிக்காதவன். வீட்டில் உணவு சமைத்தவுடன் நம் நாட்டு மங்கையர் காக்கைக்குச் சோறு போடுவார்கள். காகங்கள் கூட்ட மாக வந்து, 'கா' கா!' என்று கத்திக்கொண்டு அந்தச் சோற்றை உண்ணும் பாரியின் பறம்பு மலையில் வேறு ஒர் அரிய காட்சியைக் காணலாம். தினையரிசியையும் வேறு தானியங்களையும் இறைவ னுடைய திருக்கோயிலின் முன் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் வாரி இறைக்கச் செய்தான் ப்ாரி. அவனும் இறைப்பான். அப்போது கிளிகளும் குருவிகளும் கூட்டம் கூட்டமாக வந்து அந்தத் தானி யங்களைத் தின்னும். இது கண்கொள்ளாக் காட்சி யாக இருக்கும். மனிதர்களைக் கண்டு அஞ்சாமல் அங்கே கிளிகள் கூட்டமாக வந்து பழகும்; குருவிகள் கொத்தித் திரியும். -

இவ்வாறு எல்லா உயிர்களிடத்திலும் அருளோடு பழகும் இயல்புடையவன் பாரி. அவன் கண்ணில் பற்றுக்கோடின்றிப் பதைபதைத்து நிற்கும் முல்லைக் கொடி பட்டது. ஓரறிவுயிராயினும் அது இறைவன் படைப்பிலுள்ள உயிர்க் கூட்டங்களில் ஒன்றுதானே? பச்சை மரங்களைக் காரணம் இன்றி வெட்டாதவர் தமிழர். நோய்க்கு மருந்தாக ஏதேனும் பச்சிலையைப் பறிக்க வேண்டுமானலும் அதற்கு மனம் வருந்தி இறைவனை எண்ணிப் பறிப்பது மரபு. தாவிப் படரக் கொழு கொம்பு இல்லாத கொடிக்குக் கோல் ஊன்றிப் படர விடுவதை அறச் செயலாக எண்ணும் மனப் பான்மை உடையவர்கள் தமிழ்நாட்டுச் சான்றேர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/31&oldid=583849" இலிருந்து மீள்விக்கப்பட்டது