பக்கம்:பாரி வேள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லேக்குத் தேர் 33 முல்லைக் கொடியின் வளர்ச்சி கண்டு மகிழ்ந்த பாரி அதன் தளர்ச்சி கண்டு மனம் நெகிழ்ந்தான். அதனைப் படர விட அருகில் மரம் இல்லை. இருந் தால் அதுவே பற்றிக்கொள்ளாதா? தன்னை அணு கும் இரவலர்க்குக் கையில் உள்ளது எதுவாயினும் வழங்கிவிடும் வள்ளல் பாரி. தன் முன் நிற்பவ ருடைய வறுமையை நினைப்பானே யன்றித் தான் கொடுக்கும் .பொருளின் அருமையைக் கருதமாட் டான். தேர் இருந்தால் தேரைக் கொடுப்பான்; குதிரை இருந்தால் குதிரையைக் கொடுப்பான்; யானையையும் கொடுப்பான். ஒன்றும் இல்லையானல் கைவளையைக் கழற்றிக் கொடுப்பான். இன்னதைக் கொடுப்பான், இன்னதைக் கொடுக்கமாட்டான் என்ற வரையறையே இல்லை. இதைத்தான் கொடை மடம் என்று சொல்வார்கள். . . . . . . . . . . . . . . "கொம்பர் இல்லாக் கொடிபோல் அலமந்தனன் கோமளமே' என்று பாடுவார்கள் பெரியவர்கள். துணை செய்வாரின்றி வாடும் மக்களின் துயரத்தைச் சுட்டுவ தற்குச் சிறந்த உபமானமாகப் பற்றுக் கோடில்லாத கொடியைச் சொல்வது பழமொழியாகிவிட்டது, தமிழ் நாட்டில். பாதுகாப்பின்றித் தவிப்பவரைக் கண்டு. நெகிழும் உள்ளத்திற்கு உண்மையில் கருணை இருந் தால், அப்படித் தவிப்போருக்கெல்லாம் உவமையாக இருக்கும் கொம்பில்லாக் கொடியைக் கண்டு அவ் வுள்ளம் நெகிழாமல் இருக்குமா? - -

பாரி முல்லைக் கொடியைக் கண்ட கணத்திலே மனம் உருகினன். அது மென் காற்றில் அலைந்து ஒசிந்த காட்சி அவன் உள்ளத்தை அலமரச் செய் தது. அதற்கு வேண்டியது கொழுகொம்பு; ஒரு பற்றுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/32&oldid=583850" இலிருந்து மீள்விக்கப்பட்டது