பக்கம்:பாரி வேள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 - பாரி வேள்

கோடு. யாரேனும் உழவகை இருந்தால் எங்காவது போய் ஒரு மூங்கிலைத் தேடிக் கொண்டு வந்து அங்கே நடுவான். வருந்துகிறவர்களைக் கண்டபோதே அருள் சுரந்து அந்தக் கணத்தில் கிடைத்ததை வீசும் பாரியால் அப்படிச் செய்ய இயலாதே! அவன் உடனே வலவனை அழைத்தான். குதிரைகளே அவிழ்த்துவிடச் சொன்னன். மெல்லத் தன் தேரையே முல்லைக் கொடியின் அருகில் இழுத்து நிறுத்தச். செய்தான். கொடியை மெல்ல அதன்மேல் எடுத்துவிட்டான். அப்போது அவனுக்கு உண்டான இன்பத்தை அளந் தறியும் ஆற்றல் யாருக்கு உண்டு ஆழ்கடலில் மூழ்கி உயிர் போகும் தறுவாயில் இருந்த ஒரு குழந்தையை எடுத்துக் கரையில் விட்டது போன்ற உவகை அவனுக்கு உண்டாயிற்று என்று சொல்லலாமா? பல நாள் பசித்திருந்த ஏழைக்கு இலை நிறையச் சோறு: போட்டதைப் போன்றிருந்தது என்று கூறலாமா? தனக்கு ஏற்ற மனளன் கிடைக்காமல் நின்ற கன்னி ஒருத்திக்கு ஒர் ஆடவனை மணம் செய்வித்தது போன்றது என்று இயம்பலாமோ? அத்தகைய செய்ன்கைகளை உலகம் கண்டிருக்கும். ஆனல் ஒரு கொடி தளர்வது கண்டு அதைத் தாங்கத் தன் தேரை நிறுத்திய பாரியின் செயலையும், அதற்குக் காரணமாக இருந்த அவனது உயர்ந்த அருள் உள்ளத்தையும் உவமையைக் கூறித் தெரிந்துகொள்ள முடியாது. அவற்றிற்கு அவைகளே ஒப்பு:

நாம் செல்லும் தேராயிற்றே என்று பாரி நினைக்க வில்லை. அவன் நினைவு முழுவதும் அந்தக் கொடி நின்ற நிலையிலே, அதன் தளர்ச்சியிலே ஒன்றிப் போய்விட்டது. அப்போது அவன் தேரில் வராமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/33&oldid=583851" இலிருந்து மீள்விக்கப்பட்டது