பக்கம்:பாரி வேள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக்குத் தேர் 忍5 நடந்து வந்திருந்தால், தானே கொழு கொம்பாக நின்

றிருப்பான்! என்ன அருமையான பண்பு

சிறிது நேரம் பாரி முல்லைக் கொடியைப் பார்த் தான். அது தன் அரும்புகளைக் காட்டிப் புன்முறுவல் பூத்தது. உடன் நின்ற தேரோட்டி பாரியின் செய லைக் கண்டு விம்மிதம் அடைந்தான். அந்த வள்ள லுடைய அருட் செயல்கள் பலவற்றைக் கண்டவன் அவன். ஆயினும் அந்த அருள் இவ்வளவு உயர்ந்த நிலைக்கு, மிக மிக நுட்பமான நிலைக்குச் செல்லும் என் பதை அவன் நினைத்தும் பார்க்கவில்லை.

பாரி அவ்விடத்தை விட்டு நகர்ந்தான். முல்லை பற்றுக்கோடு பெற்றுப் படர்ந்த அழகைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே நடந்தான். . . .

பறம்பின் அடிவாரம் வந்தான் பாரி. அங்கே இருந்த குடிமக்களிடம் வலவன் தான் கண்ட அதி சயத்தைச் சொன்னன். அவர்கள் வியந்தார்கள். பாரி வேளின் மன நெகிழ்ச்சியைப் பாராட்டினர்கள், சிலர் வேண்டிய பொருள்களுடன் அவ்விடத்துக்குச் சென்று ஒரு பந்தலையே போட்டு முல்லைக் கொடியைப் படர விட்டுத் தேருக்கு விடுதலை அளித்தார்கள். காட்டு வழியில் பந்தலிலே படரும் முல்லைக்கொடி அது ஒன்றுதான். மற்றக் கொடிகளுக்கு இல்லாத பெருமை அதற்கு உண்டாயிற்று. அந்தப் பந்தல் பாரியின் தேரை நினைப்பூட்டிக் கொண்டிருந்தது. அந்த வள்ள லின் உள்ளத்தை நெகிழ்வித்த முல்லைக் கொடியை மக்கள் வந்து பார்த்துப் பார்த்துச் சென்ருர்கள்.

'முல்லைக்குத் தேரை வழங்கினன் பாரி' என்ற செய்தி பறம்பு நாடு முழுவதும் பரவியது; புலவர்கள் உள்ளத்தே வியப்பையும் களிப்பையும் படரச் செய்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/34&oldid=583852" இலிருந்து மீள்விக்கப்பட்டது