பக்கம்:பாரி வேள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 பாரி வேள்

இல்லை. இரண்டாவது: இங்குள்ள பலா மரங்களில் மிகவும் இனிய சுளைகளையுடைய பழங்கள் கனிந்து பழுத்து உதிர்கின்றன. இந்த இரண்டு மட்டும் அல்ல. படர்ந்து அங்கங்கே ஒடிக் கிடக்கும் வள்ளிக் கொடிகளில் பெரிய பெரிய கிழங்குகள் இருக்கின்றன. அவற்றைச் சுட்டு உண்ணலாம். எங்கே பார்த்தாலும் தேனடைகள் இருக்கின்றன. அவற்றில் தேன் நன்ருக முதிர்ந்து நீல நிறம் பெற்று அருவியாக விழுந்துகொண்டிருக்கிறது. இவற்றை வைத்துக் கொண்டு வாழ்நாள் முழுவதும் இனிய உணவு உண்டு வாழலாமே!' -

ஒன்றே, - -

சிறியில் வெதிரின் தெல்விளை யும்மே;

இரண்டே, • .

தீஞ்சுளைப் பலவின் பழம்ஊழ்க் கும்மே;

மூன்றே, - -

கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவிழ்க் கும்மே;

நான்கே,

அணிநிற ஒரி பாய்தலின் மீது அழிந்து

திணிநெடுங் குன்றம் தேன்சொரி யும்மே.

இத்தனையும் விளைவதற்கு இடம் எங்கே என்று

யோசிக்க வேண்டாம். பாரியின் மலை வானத்தைப் போல விரிந்தது. வானத்தில் மீன்கள் இருப்பது - ஒன்று: சிறிய இலையையுடைய மூங்கிலில் கெல் விளேயும். இரண்டாவது: இனிய சுளேகளேயுடைய பலாப் பழம் கனிந்து உதிரும். மூன்ருவது; வளப்பமான கொடியில் வள்ளிக்கிழங்கு பூமிக்கடியில் வளரும். 'நான்காவது அழகிய நீலமான ஒரி படர்வகளுல் மேலே கனிந்து திண்ணிய உயர்ந்த மலையில் எங்கும் தேன் அருவியாகச் சொரியும். ஒரி-முதிர்வைக் காட்டும் நிறம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/59&oldid=583877" இலிருந்து மீள்விக்கப்பட்டது