பக்கம்:பாரி வேள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுகை - 5直

போல இந்த மலையில் சுனைகள் இருக்கின்றன. அவற்றை எண்ணி இத்தனை என்று வரையறுப்பது இயலாது. * -

வான்கண் அற்று அவன் மலேயே; வானத்து மீன்கண் அற்று அதன் சுனேயே. *

'இத்தகைய இடத்தில் நீங்கள் பல யானைகளைக் கொண்ட படையோடு வந்திருக்கிறீர்கள். மரத்துக்கு ஒன்ருகக் கட்டும் அளவுக்கு உங்கள் யானைகளைக் கொண்டு வந்தாலும், கானும் இடங்களில் எல்லாம் உங்கள் தேரை நிறுத்தியிருந்தாலும் பாரி உங்களுக்கு வசப்பட மாட்டான். அவன் குன்றத்தை உங்கள் முயற்சியினல் கொள்ள இயலாது. வாளோச்சிப் போர் செய்தாலும் அவன் தரமாட்டான். அதை அடையும் விதம் ஒன்று எனக்குத் தெரியும். தேரையும் களிற்றையும் விட்டுவிட்டு, வில்லையும் வாளையும் எறிந்துவிட்டு, வாரி முறுக்கிய நரம்புக் கட்டை யுடைய சிறிய யாழை எடுத்துக் கொள்ளுங்கள். நன்ருகச் சுருதி சேர்த்துக் கொண்டு வாருங்கள். மணம் பொருந்திய கூந்தலையுடைய உங்கள் மனைவி மார் விறலியரைப் போல உங்களைத் தொடர்ந்து வர, நீங்கள் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் வந்தால், பாரி உங்கள் ஆடல் பாடலைக் கண்டு மகிழ்ந்து, பறம்பு நாட்டையும் பறம்பு மலையையும் ஒருங்கே தந்து விடு

வான். இவ்வளவு எளிய வழியில் பெறும் வகை

இருக்க, எதற்காக இப்படி யெல்லாம் அல்லற்பட் வானில் உள்ள இடத்தைப்போல அகன்றது அவன் மலே; அந்த வானத்தில் உள்ள கட்சத்திரங்களைப் போன் றது. அங்குள்ள சுனைகளின் தொகுதி. . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/60&oldid=583878" இலிருந்து மீள்விக்கப்பட்டது