பக்கம்:பாரி வேள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5& - பாரி வேள்

வேண்டும்?' என்ற கருத்துப் புலப்படும்படியாகப்

பாட்டின் இறுதிப் பகுதி அமைந்திருந்தது.

மரந்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும் புலந்தொறும் பரப்பிய தேசினிர் ஆயினும் தாளிற் கொள்ளலிர்; வாளில் தாரலன்; யான்அறிகுவன்அது கொள்ளு மாறே; சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி விரைஒலி கூந்தல் தும் விறலியர் பின்வர ஆடினிர் பாடினிர் செலினே, நாடும் குன்றும் ஒருங்குஈ யும்மே. *

- 'நீங்கள் வீரத்தால் பாரியை வெல்ல முடியாது. கலைப் பண்பு உங்களிடம் இருந்தால் அவனை அணுக லாம்' என்ற கருத்தைப் பாட்டு, குறிப்பாக வெளி யிட்டது. எத்தனை நாள் முற்றுகையிட்டாலும் உண வில்லாமல் தவிக்கும் நிலை பறம்பு மலையின் மேல் இருப்பவர்களுக்கு வராது என்ற செய்தியையும் அது தெரிவித்தது.

மூன்று மன்னர்களும் இனி என்ன செய்வது

என்று ஆராய்ந்தார்கள். அவர்கள் தங்கள் நகரத்தை விட்டுவிட்டு எத்தனை காலம் பறம்பு மலையின் அடி வாரத்தைக்காத்து நிற்பது? மூங்கிலரிசியைச் சமைத்து ஆங்கு-அவ்விடத்தில். பிணித்த-கட்டிய புலம்இடம். தாளின்-முயற்சியால். கொள்ளவிர்-கைப்பற்றமாட் டீர். தாரலன்-தரமாட்டான். சுகிர்புரி நரம்பின்-சுகிர்ந்து முறுக்கிய நரம்பையுடைய. சீறியாழ்-சிறு யாழ். பண்ணி -நன்கு அமைத்து, விரை-மணத்தையுடைய, ஒலி

தழைத்த. மன்னர்களைப் பாணர் பேர்ல வரச் சொன்னமை யால் அவர்களின் மனைவிமாரை விறலியர் என்ருர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/61&oldid=583879" இலிருந்து மீள்விக்கப்பட்டது