பக்கம்:பாரும் போரும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

போரும் இலக்கியமும்:

  • சாதலின் இன்னுதது எதுவும் இல்லை' என்று வள்ளுவப் பெருந்தகையே வற்புறுத்துகிருர். ஆனல் அதே வள்ளுவப் பெரியார், சாவு முழக்கமிட்டுக் களி நடம்புரியும் போர்க்களத்தில், உயிரைத் துக ளென எண்ணி விழுப்புண்படாத நாட்களை வீணன நாட்களில் வீரர் வைப்பர்' என்று கூறிப் படைச் செருக்கைப் பலபடப் பாராட்டுகிருர். அடிக்கும் கோலுக்கு அஞ்சாமல் சீறும் படவரவுபோல், குத் தும் வேலுக்கஞ்சாமல் கொதித்தெழும் வீரர்களே நம் நாடு கண்டிருக்கிறது. கைவேலைக் களிற்றின்மேல் வீசி, மெய்வேலைப் பறித்து நகும் வீரர்களின் புகழை நம் இலக்கியங்கள் பாடி மகிழ்கின்றன

இகல் வேந்தர் வலிதொலைத்து, அவர் நாட்டில் எரியூட்டிய வெற்றியாளன் சிறப்பு இலக்கியங்களில் மிகுத்துக் கூறப்படுகிறது. பல்லாயிரக் கணக்கான உயிர்களைக் கொன்ற பார்வேந்தன் புகழை, நம் நாடு பரணிபாடிப் போற்றுகிறது. ஏன்? உலகில் இன்று தலைசிறந்த இலக்கியங்கள் என்று போற்றப்படுவன எல்லாம், பல்லாயிரவர் ஒன்ருகப் படுகொலை செய் யப்படுவதையே பரக்கப் பாடுகின்றன.

வடமொழியிலுள்ள இராமாயண மகாபாரதங் களும், தமிழிலுள்ள புறப்பொருள் நூல்களும், கிரேக்க மொழியிலுள்ள இலியாது, ஒதீசியம் போன்ற நூல் களும், இலத்தீன் மொழியிலுள்ள ஏணிடு என்ற இலக் கியமும், ஆங்கிலத்திலுள்ள ஆர்தர் மன்னரின் காவிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/11&oldid=595521" இலிருந்து மீள்விக்கப்பட்டது