பக்கம்:பாரும் போரும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

வேந்தன் சிறப்பை வீரர் புகழ்ந்து பகைவரது நாடு அழிதலுக்காக இரங்குவர். போரில் பொருத வீரர்களுக்கு அரசன் பல பரிசுகளை வழங்கிச் சிறப் புச் செய்வான். பகைவர் தனக்கு அஞ்சிப்பணிந்து திறையளப்ப, அரசன் சினம் தணிந்து மீளுதலும் உண்டு. பகைவரோடு போரிட்டு வென்ற வீரர்கள் அரசனுற் சிறப்புப் பெற்றதைச் சிலர் புகழ்வர். பகை' வரோடு பொருத காலத்தில் சில வீரர் தம்முடைய ஆண்மையை மிகுத்துக் கூறுவர். போரிற் பட்டவர் களுடைய மக்களுக்கு அரசன் விளைநிலம் முதலிய வற்றை அளிப்பான். -

சில அரசர் பகைவருடைய நாட்டில் எரியூட்டு வர் ; அங்குள்ள பொருள்களைக் கொள்ளை கொண்டு வருவர் ; அங்ங்னங் கொணர்ந்த பொருள்களைப் பாணர் முதலியவர்களுக்குக் கொடுத்து உவப்பர். சில அரசர் தம்மை எதிர்த்துப் போர் செய்பவரால் குடி களுக்கு உண்டாகும் துன்பத்துக்கு அஞ்சி, பகை யரசருக்கு யானை குதிரை முதலியவற்றைத் திறை யாகக் கொடுத்து, அத்துன்பம் உண்டாகாதபடி பாதுகாப்பர். பகைமேற் சென்ற காலத்தில் அரசன் பாசறையை அமைத்து, அதில் படைகளுடன் தங்குவான்.

போர் செய்யுங் காலத்தில், தன்னை எதிர்த்து வந்த படையை ஒரு வீரன் தனியே நின்று பெரு வெள்ளத்தைத் தடுக்கும் அணையைப் போலக் காப்ப தும் உண்டு. வீரர், தமக்குத் தோற்றுப் புறங்காட்டு பவரைப் படைகொண்டு தாக்கமாட்டார்கள் ; அவ் வாறு செய்வதை மிகவும் இழிந்த செயலாகவும், போர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/24&oldid=595547" இலிருந்து மீள்விக்கப்பட்டது