பக்கம்:பாரும் போரும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

முதலைகள் செருக்கித் திரிந்தன. அவ்வகழியின் புறத்தே காவற்காடு அமைந்திருந்தது.

கோட்டை மதில்களில், மிகவும் நூதனமான பொறிகள் அக்காலத்திலேயே பொருத்தப்பட்டிருந் தன. அவைகளின் சிறப்பு மிகவும் போற்றற் குரிய தாகும். மாற்ருரைக் கடித்துத் துன்புறுத்தும் கருங் குரங்கு போன்ற பொறியும், கல்லினை வீசுகின்ற கவ ணும், அருகில் வருவோரின் மேல் கொதித்த நெய்யை வீசும் பொறியும், செம்பினை உருக்குகின்ற குழிசிகளும், இரும்பு காய்ந்து உருகுவதற்கு வைத்த உலைகளும், கல்நிறைய இடப்பெற்ற கூடைகளும், வந்தோரை மர்ட்டித் துன்புறுத்தும் தூண்டில் போன்ற கருவிகளும், கழுத்திற் பூட்டி முறுக்கும் சங்கிலியும், ஆண்டலைப்புள் வடிவாகச் செய்த அடுப்புகளும், அகழியினின்று ஏறின் தள்ளுகின்ற இரும்புக் கப்புகளும், கழுக்கோலும், அம்புக்கட்டு களும், நுழைவோரை மயங்க வைக்கும் அறைகளும், தன்னை நெருங்கினுேர் தலையை நெருக்கித் திருகும் மரங்களும், மதிலின் உச்சியைப் பற்றுவார் கையை நடுங்கச் செய்யும் ஊசிப் பொறிகளும், பகைவர்மேற் சென்று தாக்கும் சிச்சிலிப் பொறியும், மதிற்கண் ஏறி ைைரக் கோட்டாற் கிழிக்கும் பன்றிப் பொறியும், மூங்கில் வடிவாகச் செய்து அடித்தற்கு வைத்த பொருள்களும், கதவிற்கு வலியாக உள் வாயிற்படி யிலே நிலத்தில் வீழவிடு மரங்களும், எறிகோலும், சிறு சவளமும், ஈட்டி முதலியனவும் மதிலின் மேற் பொருத்தப் பட்டிருந்தன. "

  • சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்

பா. 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/34&oldid=595567" இலிருந்து மீள்விக்கப்பட்டது