பக்கம்:பாரும் போரும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

போர்க் கொடிகள்:

விற்கொடியும், புலிக் கொடியும், மீனக்கொடியும் முறையே சேர சோழபாண்டியர்க்குரியபோர்க்கொடி களாக விளங்கின. இவைகளல்லாமல் காளைக் கொடி, கருடக்கொடி, துகிற்கொடி, நாட்கொடி, பனைக்கொடி, மயிற்கொடி, விசயக்கொடி (வெண் கொடி) முதலியவை சிற்றரசர்கட்கும் வேளிர்களுக் கும் உரியனவாக விளங்கின.

படை வகுப்பு :

சங்க காலத்தில் பொதுவாகத் தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என நாற்படைகள் இருந்தன. இன்னும் முன்படை, பின் படை, தூசிப்படை, கிடுகுப்படை, விற்படை, வாட் படை, வேற்படை, பக்கப்படை என்ற சிறப்புப் பிரிவு களும் இருந்தனவாக அறிகிருேம். அரசனே படைத் தலைமை தாங்கிப் போர் நடத்தி வந்தான். பெருஞ் சோழர் (Imperial Cholas) காலத்தில் யானைப்படை யும், குதிரைப்படையும், காலாட்படையுமே இருந் தன. யானே வீரர்கள் குஞ்சரமல்லர் என்று அழைக்கப் பட்டனர். குதிரைப்படை பரிப்படை' என்ற பெய ரால் அழைக்கப்பட்டு வந்தது. காலாட்படைஞர்கள் கைக்கோளப் பெருமக்கள் என்று அழைக்கப்பட்டு வந்தனர். வில் வீரர்கள் வில்லிகள் என்றும், வேல் வீரர்கள் வேல் பெற்ற கைக்கோளர் என்றும் வலங்கை வேலைக்காரர் என்றும் அழைக்கப்பட்டனர்.

பெருஞ்சோழர்கள் எல்லைப்படைகளும் (Territorial Divisions) வைத்திருந்தனர். பாண்டி நாட்டின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/35&oldid=595569" இலிருந்து மீள்விக்கப்பட்டது