பக்கம்:பாரும் போரும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

வீரமும் வெற்றிச் சிறப்பும் நாகரிகமும் நற்கலை யும் ஓங்க, பீடும் பெருமையும் திகழ வாழ்ந்த கிரேக்க நாடு, உரோமானியரின் தாளடியில் மண்டியிட்டுக் கிடந்தது. எந்த நாட்டிலும் மாவீரர்கள் என்று சிறப்பிக்கத் தக்கவர்கள் நூற்ருண்டுக்கு ஒருவர் கூடத் தோன்றல் அரிது. ஆல்ை, உரோம நாட்டிலோ, ஒரே நூற்ருண்டில் பாம்பி, சீசர், அந்தோணி, அக்டேவியஸ் போன்ற மாவீரர்கள் தோன்றி உலகையே நடுங்க வைத்தனர். அவர் களுடைய போர்க் கப்பல்களும், வாணிகக் கப்பல் களும் பாய்விரித்துச் செல்லாத பரவை கிடையாது. தமிழகத்தின் தொண்டியிலும், முசிரியிலும், கொற்கை யிலும், புக்ாரிலும் உரோமானியரின் புகழ் மணம் கமழ்ந்தது.

உரோமானியர்கள் அழகிய மேனியும், வடித் தெடுத்த சிலபோன்ற உடற்கட்டும், போர் என்ருல் புடைத்தெழும் தோள்களும், சலியாமல் போர் உடற் றும் தொலையா ஊக்கமும் கொண்டவர்கள். போரையே தங்கள் வாழ்வின் குறிக்கோளாகவும் கடமையாகவும் கொண்டவர்கள். போர் வீரனே, உரோமாபுரியில் உண்மை மனிதனுகக் கருதப்பட் டான். மாற்ருரின் வலியைத் தொலைத்து, மாவீர கை வாகைசூடி வந்தவனே உரோம நாட்டின் தலைமைப் பீடம் எதிர் கொண்டழைத்து ஏந்திக் கொண்டது. பேரும் புகழும், பொன்னும் மணி யும், அ வ ன் தாளடியில் புரண்டன. வல் லான் வகுத்ததே வாய்க்கால் என்னும் சொல்லுக் கிணங்க, மாவீரர் ஏந்திய வாள் அசைந்த பக்க மெல்லாம் உரோம நாடு அசைந்தது. ஐரோப்பியப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/47&oldid=595593" இலிருந்து மீள்விக்கப்பட்டது