பக்கம்:பாரும் போரும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

பெரு நிலத்தையும் வென்று, ஆசியாவின் பகுதிகனை யும், ஆப்பிரிக்காவின் வடபகுதிகளையும் உரோமப் பேரரசு தன்னடிப் படுத்தியது. சீசர் தன் கடற்படை யின் வலிமையால் பிரிட்டனையும் வென்று வாகை சூடினன். “உலகம் முழுவதையும் வென்று, அதன் மேல் அரியணே அமைத்து, அதில் அமர்த்தி உனக்கு அணிமுடி சூட்டுகிறேன்' என்று எகிப்து நாட்டரசி கிளியோப்பாத்திரைக்கு அஞ்சாநெஞ்சன் அத் தேர்ணி ஆணையிட்டுக்கூறினன். சீசரின் உறவின னை அக்டேவியஸ் உறுதியும் அழகும் மிக்க கொலீசியம் என்ற மாபெரும் மாளிகையைக் கட்டியதுபோல, அமைப்பாலும் பரப்பாலும் சிறப் பமைந்த உரோமப் பேரரசை நிறுவினன்.

சாவைக்கண்டு அஞ்சாதவனும், வெறுப்படை யாதவனும் உலகில் இல்லை என்பர். ஆனல் உரோ மானியர்கள் சாவைக் கண்டு அஞ்சியதாகவோ வெறுத்ததாகவோ வரலாறு கூறவில்லை. வட இந்தி யாவின் ஒரு பகுதியில் கி. பி. ஆரும் நூற்ருண்டில் ஹ9ணர்கள் (Huns) என்ற முரட்டுக் கூட்டத்தார் ஆண்டார்கள். அவர்களில் மிகிரகுலன் என்பவன் இரக்கமற்ற அரக்கன். கொடுஞ் செயலுக்குப் பேர் பெற்றவன். மலேமீதிருந்து யானைகளை உருட்டி விட்டு, அவைகள் வீறிட்டுக் கொண்டு வீழ்ந்து மடி வதைக் காண்பது அவனுக்கு மிகவும் பிடித்தமான இன்பப் பொழுது போக்கு என்று காசுமீர நாட்டு வரலாற்றை விளக்கும் இராசதரங்கினி என்னும் நூல் கூறுகிறது. ஆல்ை உரோம நாட்டு மன்னர்களோ, தங்கள் முன்னுல் செத்து மடிவதற்கென்று ஒரு கூட் டத்தையே சோறிட்டு வளர்த்தனர். அவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/48&oldid=595595" இலிருந்து மீள்விக்கப்பட்டது