பக்கம்:பாரும் போரும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. உலகப் போர்கள் போருக்கு முன் : பதினெட்டாம் நூற்ருண்டில் மேலே நாடுகள் விஞ்ஞானத்தில் பெரிதும் வளர்ச்சியுற்றன. சிறந்த விஞ்ஞானப் பொறிகளும், கடலிலும் மண்ணிலும் விண்ணிலும் செல்லும் சிறந்த போக்குவரவுச் சாத னங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. ஒவ்வொரு நாடும் தொழில் துறையில் மிக முன்னேறியது. கேப்டன் குக், டேவிட் லிவிங்ஸ்டன் முதலியோர், பல புது நாடுகளைக் கண்டறிந்தனர். நாட்டின் கைத் தொழிலை வளர்த்து நிறைந்த பொருள்களை உற்பத்தி செய்வதற்கும், அப்பொருள்களை உண்டாக்குவதற் கான மூலப் பொருள்களைப் (Raw Meterials) பெறு வதற்கும், அவ்வாறு உண்டாக்கிய பொருள்களை விற்றுப் பெரும் பொருள் திரட்டுவதற்கும், ஒவ் வொரு வல்லரசும் போட்டி போட்டுக்கொண்டு உல கின் பல பகுதிகளையும் வென்று, குடியேற்ற நாடு களே (Colonies) ஏற்படுத்தி, அவைகளைச் சுரண்டத் தொடங்கின. ஆதிக்கத்தையும் வாணிகத்தையும் பரப்ப, வல்லரசுகள் ஒன்றையொன்று விரைத்துப் பார்க்கத் தொடங்கின. ஜெர்மனி நீண்ட காலத் திற்குப் பிறகு வல்லரசாக மாறியது ; பிறநாடுகளைக் கைப்பற்றித் தன் செல்வாக்கை வளர்க்க வேண்டு மென்று பேரவாக் கொண்டது. பிஸ்மார்க் என்ற தலைசிறந்த தலைவர் தோன்றி, ஜெர்மனியின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/89&oldid=820548" இலிருந்து மீள்விக்கப்பட்டது