பக்கம்:பாரும் போரும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 ரியா, இதாலி ஆகிய நாடுகளின் முக்கூட்டு ஒப்பந் தம், பிரிட்டன் பிரான்சு உருசியா ஆகிய மூன்று நாடுகளும் சேர்ந்து எதிர்ப்பு அணி அமைக்கக் காரணமாக இருந்தது. எதிர்பாராமல் ஏற்பட்ட பால்கன் போரில், குருதி ஆறு ஓடியது. செர்பிய நாட்டு மன்னரான அலெக்சாந்தரும், அரசி டிகாரா வும், அரச குடும்பத்தாரும் அந்நாட்டுப் புரட்சிக் காரர்களால் வெறுக்கத்தக்க முறையில் படுகொலை செய்யப்பட்டனர். சுயாட்சி வேண்டி அயர்லாந்து பெரும் புரட்சி செய்து கொண்டிருந்தது. இத்தகைய சூழ்நிலையில் ஒவ்வொரு நாடும், தங்கள் படைப் பலத்தை அளவுக்கு மீறிப் பெருக்கத் தொடங்கியது. ஒவ்வொரு நாட்டு அரசியல் வாதி களும், தலைவர்களும் நாட்டு மக்களைப் போரில் நாட்டங்கொள்ளத் துண்டும் வகையில் பிரசாரம் செய்தனர். செய்தித் தாள்கள் இப்பணியில் பெரும் பங்கு கொண்டன. படைக்கலப் பொருள்களை உற் பத்தி செய்யும் தொழிற்சாலைகளில், உயர்ந்த அரசி யல் அலுவலாளர்களும், அரசியலில் செல்வாக்குப் பெற்ற செல்வந்தர்களும், பெரும் பங்காளிகளாக இருந்தனர். அவர்களுக்கு இப் போர்க்கோலம் நல்ல சம்பா அறுப்பாக இருந்தது. போர் ஏற்பட். டால் நிறையத் தளவாடங்களை உற்பத்தி செய்து, திரண்ட பொருளைச் சேர்க்க அவர்கள் விரும்பினர். அவர்கள் தன்னலம் கருதிப்போரை ஆதரித்ததோடு தங்கள் செல்வாக்கால் அரசியலாரையும் போருக்குத் துரண்டினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/91&oldid=820550" இலிருந்து மீள்விக்கப்பட்டது