பக்கம்:பாரும் போரும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 தியது. பெல்ஜியம் தன் சிறு படையால், பொங்கி வரும் ஜெர்மானியப் படைக் கடலுக்கு அ8ணகோல முயன்றது. சினங் கொண்ட ஜெர்மானியர் பெல்ஜியம் நாட்டாரை அச்சுறுத்த வெருவந்த செயல்களிலிறங்கினர். உலுவெயின் என்ற அழகிய நகரையும் அந்நகரிலிருந்த புகழ்பெற்ற பல்கலைக் கழகத்தையும் ஜெர்மானியர் தவிடுபொடியாக்கினர். எதிர்ப்பட்ட பொருள்களை யெல்லாம் எற்றி நசுக்கிக் கொண்டு, ஜெர்மானியப் போர் உருளை மலை உருளு வது போல் பாரிசு நோக்கிச் சென்றது. போர் துவங் கிய ஒரு திங்களுக்குள், பாரிசு ஜெர்மானியர் கைக் குக் கிட்டிவிடும் போலிருந்தது. பிரெஞ்சியர் தங்கள் தலைநகரைப் பாரிசிலிருந்து போர்டோவுக்கு மாற்றுவ தற்குக்கூட வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து விட் டனர். இதற்குள்ளாக உருசியப்படை ஜெர்மனியின் ஒரு பகுதியான பிரசியாவைத் தாக்கியது. எனவே ஜெர்மானியர் மேற்கிலும் கிழக்கிலும் இரு முனைப் போராட்டம் நடத்த வேண்டியதாயிற்று. பிரசியாவி லுள்ள சதுப்பு நிலங்களிலும் ஏரிகளிலும் ஜெர்மானி யர் உருசியப் படையை வளைத்து அடியோடு அழித்து விட்டனர். இது ஜெர்மானியர் உருசியரின் மீது அடைந்த மாபெரும் வெற்றியாகும். ஜெர்மன் படை இரண்டாகப் பிரிந்ததும், பிரெஞ்சியர் ஐம்பது மைல் முன்னேறிப் பாரிசைக் கைப்பற்றிக் கொண்ட னர். பிறகு அகழிப்போர் (Trench Warfare) மூண் டது; உருசியப் படை ஆஸ்திரியப் படையைத் தோற்கடித்தது. ஆனல் ஜெர்மானியரிடம் எல்லா இடங்களிலும் தோல்வியே கண்டது. இதற்குள் துருக்கி சூயஸ் கால்வாயைத் தாக்கியது. உடனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/93&oldid=820552" இலிருந்து மீள்விக்கப்பட்டது