பக்கம்:பாரும் போரும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 ஆங்கிலேயர்கள் துருக்கிப் பேரரசின்மீது படை யெடுத்து, இராக்கையும், பாலஸ்தீனத்தையும், சிரி யாவையும் தாக்கினர். அராபியருக்குக் கையூட்டு வழங்கி, துருக்கியருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யு மாறு தூண்டினர். என்ன செய்தும் துருக்கியை வெல்ல முடியவில்லை. ஆப்பிரிக்காவிலிருந்த ஜெர்மன் குடியேற்ற நாடுகளை நேசக் கட்சியார் (பிரான்சு, இங்கிலாந்து, உருசியா) தாக்கினர். இத்தாலி பலநாள் மதிற்மேற் பூனேயாக இருந்தது; நேசக் கட்சியார் கையுயர்ந்த தும் உடனே அவர்களுடன் சேர்ந்து கொண்டது; நேசக்கட்சியார் கொடுத்த கையூட்டைப் பெற்றுக் கொண்டு, ஆஸ்திரியாவின் மேல் போர் தொடுத் தது. அதே ஆண்டில் பல்கேரியா ஜெர்மனியுடன் சேர்ந்து கொண்டது. உருமேனியா நேசக் கட்சியு டன் சேர்ந்து கொண்டது. நடு ஐரோப்பிய வல்லரசுக ளான ஜெர்மனியும் ஆஸ்திரியாவும் பெல்ஜியம், பிரான்சின் வட கிழக்குப் பகுதி, போலந்து, செர்பியா, உருமேனியா ஆகிய நாடுகளைப் பிடித்துக் கொண் டன. ஆனல் பிரான்சோடு நடந்த மேற்குப் போர் முனையில் மட்டும், எந்த முன்னேற்றமும் காட்ட முடியவில்லை. பிரிட்டன் கடலரசி என்ற பெயரைப் பூண்டு கடலாதிக்கத்தில் ஈடும் எடுப்புமின்றி விளங்கிய நாடாகும். எனவே கடலில் நேசக் கட்சியினரின் கையே மேலோங்கியிருந்தது. ஆல்ை, அந்நிலைமை அதிக நாள் நீடிக்கவில்லை. மிகவும் திறமை படைத் தவனே எம்டன் என்று இன்றும் நாம் கூறுகிருேம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/94&oldid=820553" இலிருந்து மீள்விக்கப்பட்டது