பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 பராசக்தி படமும் புரட்சிக்கவிஞர் பாடலும்! அவருக்குச் சில நேரங்களில் ஆத்திரம் வெகுவாக் வருவ துண்டு. நான் அவுரோடு பல நேரங்களிலே நெருங்கிப் பழகு கின்ற வாய்ப்பினை பெற்ற காரணத்தினுல் அத்தகைய நிகழ்ச்சிகள் சிலவற்றை உங்களுக்குச் சொன்னல் அது புதுமையாக இருக்கும். அவருடைய கவிதைகளை-அவருடைய எழுத்துக்களைத் திரும்பத் திரும்ப உங்களிடத்திலே எடுத்துச் சொல்வதை விட அத்தகைய நிகழ்ச்சிகளைச் சொல்லுவதிலே ஒரு புதுமை இருக்கும் என்பதால் சொல்ல விரும்புகிறேன். ஒருமுறை புரட்சிக் கவிஞர் சென்னையில்ே உள்ள ஏ.வி.எம். திரைபட நிறுவனத்திற்கு வருகை தந்தார். எதற்காக வந்தார் என்ருல் பராசக்தி படம் அப் பொழுது தயாராகிக் கொண்டிருந்தது. பேராசக்தி' படத்தில் வாழ்க வாழ்கவே வளமார் நமது திராவிட நாடு' என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதிய பாடலை முதல்,பாடலாக ஒரு நடனத்திற்கு அமைக்கலாம் என்று ஒரு கருத்து எடுத்துச் சொல்லப்பட்ட போது அந்தப் பாடலை இந்தப் படத்திற்கு உரிம்ையாக எழுதித் தருவாரா? என்ற கேள்வியும் எழுந்தது. நான் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு புரட்சிக் கவிஞரைச் சந்திக்க புதுவைக்குச் சென்றேன். எங்கே வந்தாய்? என்று கேட்டார். பராசக்தி என்ற ஒரு படம் எடுக்கப்படுகின்றது. அந்தப் படத்திலே தாங்கள் எழுதிய வாழ்க வாழ்கவே வளமார் நமது திராவிடநாடு' என்ற பாடலே எப்படி யாவது புகுத்தவேண்டும் என்று எண்ணுகிருேம்; அதற்கு நீங்கள் உரிமை வழங்க வேண்டும். அதனுடைய உரிமை யாளர்கள் என்ன நம்பி உங்களிடத்திலே அனுப்பியிருக் கிருர்கள்; அந்த உரிமையைப் பெற்று வரமுடியுமென்றுஎன்று கூறினேன்.