பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 புரட்சிக் கவிஞர் தன்னுடைய விழிகளே அகல விரித்து என்னைப் பார்த்தார். நான், அந்தப் பாடலுக்கு எவ்வளவு ரூபாய் வேண்டுமானலும் நான் வாங்கித் தருகிறேன் பட உரின்மயாளர்களிடத்தில் என்று சொன்னேன். உண்மையிலேயே அந்தப் பாட்டை அந்தப் படத்தில் வைக்கப் போகிருர்களா? என்று கேட்டார். நான்தான் உரையாடலே எழுதுகிறேன். வைக்கத்தான் கேட்கிறேன் என்று சொன்னேன். அப்படி வைப்பதாக இருந்தால் அவர்கள் ஒன்றும் எனக்குப் பணம் தர வேண்டாம். நான் தருகிறேனப்பா பணம் என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் அன்றைக்குச் சொன்னர். காரணம் திராவிடநாடு, அல்லது. திராவிடர் இயக்கக் கொள்கை என்ற ஒரு சொல் நம்முடைய படங்களிலே அன்றைக்கு வருவதற்கு அவ்வளவு சிரமம் இருந்தது. எனவேதான் புரட்சிக் கவிஞர் அவர்கள் அந்தப்பாடலை வைப்பதாக இருந்தால் நான் பண்ம். தருகிறேன்' என்று குறிப்பிட்டார். ஏ. வி. எம். கலைக்கூடத்தில் ஒரு நாள் : பிறகு அந்தப் பாடலுக்கான உாமையை நான் பெற்றேன். அந்தப் பாடல் ஒலிப்பதிவு செய்யப்படுகிற நேரத்தில் அவர் சென்னைக்கு-ஏ. வி. எம். நிறுவனத்திற்கு அழைக்கப்பட்டு வந்தார். - - அவரும் நானும் காரில் ஏ. வி. எம். நிறுவனத்திற்குள் வந்து கொண்டிருக்கிருேம். - - அதற்கு முன்பு சேலம்.மாடர்ன் தியேட்டருக்கு ஒரு படத்திற்கான பாட்லை. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவ்ர்கள் எழுதிவிட்டு சென்னைக்கு வந்திருக்கிருர்,