பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 இங்கே ஏ.வி. எம். நிறுவனத்திற்குள் நுழைகிற நேரத்தில் சிகப்பு விளக்கு'ப்' போடப்பட்டு எங்களுடைய கார் நிறுத்தப்பட்டது. ஏன்?" என்று கேட்டோம். இங்கே பாடல் ஒலிப்பதிவு நடந்து கொண்டிருக்கிறது. கார் ஒலி கேட்டால் அந்த ஒலி உள்ளே ஒலிப்பதிவை பாதித்து-இந்த ஒலியை அந்த ஒலிப்பதிவுக் கருவி சர்த்து விடும். ஆகவே காரை நிறுத்துங்கள் என்று சொன்னர்கள். பாரதிதாசன் அவர்களுக்குக் கடுங்கோபம் வந்து விட்டது. அப்படி என்ன பெரிய ஒலிப்பதிவு கருவி இது? என்று கோபி க்தார், 'ஏன் இப்படிக் கோபிக்கிறீர்கள்?' என்று நாங்கள் கேட்டபோது, சேலத்திலே நான் ஒரு பாட்டு எழுதிக் கொடுத்தேனப்பா, கமழ்ந்திடும் பூவிலெல்லாம்' என்று அந்தப் பாட்டிலே எழுதினேன். அந்த ஒலிப்பதிவாளர் சொல்லிவிட்டார், கமழ்ந்திடும் பூவிலெல்லாம்' என்ற அந்த வரியை மாற்றுங்கள் என்ருர், ஏன் என்று கேட்டேன். கமழ்ந்திடும்' என்பதை எங்களுடைய ஒலிப்பதிவு இயந்திரம் பதிவு ச்ெய்யாது என்ருர். பிறகு நான் யோசித்து அ ைத மாற்றி குலுங்கிடும் பூவிலெல்லாம்' என்று எழுதிக் கொடுத்தேன். கமழ்ந் திடும்' என்பதிலே வருகிற அந்த 'ழ'கரம் இருக்கிறதே அது அந்த ஒலிப்பதிவிலே சரியாகப் பதியாது என்று சொன்னர்கள். அதனல்தான் எனக்குக் கோபம். என் னுடைய கமழ்ந்திடும் என்ற வார்த்தையையே சரியாகப் பதிவு செய்ய முடியாத இந்தக் கருவி கார் ஒலியையா பதிவு செய்து விடும்?' என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அன்றைக்குச் சொன்னர்கள். ஏன் இவைகளைச் சொல்லுகிறேன் என்ருல்; த்ான் சொல்லுகின்ற சொல்-தான் எழுதுகின்ற எழுத்து அதில் ஒரு திருத்தமோ-அல்லது அது சரியில்லை; அதைப் பதிவு 271 3–2