பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 செய்ய இயலாது என்று கூறவோ உரிமை படைத்தவர்கள் அல்லர் என்ற அளவுக்கு அத்தகைய துணிச்சலும், அதை எடுத்துச் சொல்லுகின்ற ஆற்றலும், அத்தகைய வீரமும் பொருந்தியவராக புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் திகழ்ந்தார்கள். பாரதிதாசன் அவர்களே-பேரறிஞர் அண்ணு அவர்கள் நிதி வழங்கி சிறப்பித்த நிகழ்ச்சியை என்னுடைய நண்பர் அன்பில் அவர்கள் இங்கே எடுத்துக் காட்டினர்கள். கவிஞர்களிடத்திலே தனிப்பட்ட முறையிலே சில குறை பாடுகள் இருக்கலாம். நாம் பாரதிதாசன் என்றதும், அவருடைய உயர்ந்த தோற்றம்-நான் ஒரு கவிதையிலே அவரைப் பற்றி எழுதியிருப்பதைப் போல நெற் கதிர் கட்டு மீசை நெடிய உருவம்-வேங்கை போல் நிமிர்ந் திருக்கின்ற அந்தச் சாயல்-அந்தக் கம்பீரம் இவைகளை எல்லாம் மறந்து விட்டு, பாரதிதாசன் என்றதும் அவரு டைய இயல்புகள், அவருடைய குளுதிசயங்கள், அவரு டைய செயல்கள் இவைகளை எல்லாம் மறந்து விட்டு நம் முன்ல்ை நிற்க வேண்டியது. "சிற்றுாரும் வரப்பெடுத்த வயலும் ஆறுதேக்கிய கல்வாய்க்காலும் வகைப்படுத்தி கெற்சேர உழுதுழுது பயன் விளக்கும் கிறை உழைப்புத் தோள்களெல்லாம் எவரின் தோள்கள்?" என்று கேட்டாரே அந்தக் கேள்விதான் நம் முன்னுல் நிற்க வேண்டுமேயல்லாமல், அன்பில் குறிப்பிட்டதைப் போல பார்திதாசன் என்கின்ற ஒரு தனி மனிதன் அல்ல. பாரதிதாசன் என்பவர் கவிதையின் வடிவம்: பாரதிதாசன் என்பவர் தமிழின் உருவம்! வெங்கொடுமைச் சாக்கர்ட்டில் விளையாடும் தோள்கள் எங்கள் வெற்றித் தோள்கள்.