பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 புரட்சிக் கவிஞரின் பிறந்த நாள் இன்று! இருட்ட்டிப் புக்களையும் மீறி முகிலக் கிழித்துவரும் முழுமதிபோல் புரட்சிக் கவிஞரின் ஆற்றல் இன்றைக்கு வெளிவந்து கொண்டிருப்பது கண்டு தன்மான உள்ளங்கள் பூரிக் கின்றன. தந்தை பெரியார் கொள்கையிலே புரட்சிக் கவிஞர் தம்மை இனத்துக் கொண்டதுதான் இந்தச் சமுதாயத்தில் அவர் செய்த ப்ாவம்ாக்கப்பட்டு-இருட்டடிப்புக்குள் ளாளுர், - புரட்சிக் கவிஞரின் பாடல்களோ லட்சியத் திப் பொறிகள். புரட்சி வார்ப்புகள். பொதுவுடைமையைப் பாடிய கவிஞன். இவரைப் போல் எவரும் இல்லை. ஆளுல் பொதுவுடைமை இயக்கத் தினரோ புரட்சி கவிஞருக்கு உரிய சிறப்பை அளிக்கத் தவ்றி-பாரதிக்கே பல்லக்குச் சுமந்து கொண்டிருக் கின்றனர். தமிழ் கூறும் நல்லுலகத்தில்-இன்று தன்மானக் குயில் களாகப் பாடிதிரியும் ஒரு மாபெரும் ப்ட்டாளத்தைத் தனது பரம்பரையாக உருவாக்கிச் சென்றிருக்கும் பெரும் சிறப்பு புரட்சிக் கவிஞருக்குத் தான் இருக்கிறதே தவிர வேறு எந்த மகாகவித்கும் கிடையாது. புரட்சிக் கவிஞரின் எழுச்சிப் பாக்கள்-அவ்வளவு பாதிப்பை ஒவ்வொரு உள்ளத்திலும் ஏற்படுத்தியது. புரட்சிக் கவிஞரின் முழு வாழ்க்கை வரலாற்றைத் தொகுக்கும் பணி நடந்ததாக வேண்டும். பல்கலைக் கழகங்கள் புரட்சிக் கவிஞரின் பாடல்களைப் பாடதிட்டத்தில் சேர்க்க வேண்டும். புரட்சிக் கவிஞரை புரட்சிக் கவிஞர் என்றே அழைக்கப்படுதல் வேண்டும். -