பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 புதுச்சேரி கனக சபை முதலியார். இலக்குமி அம்மையாருக்கு மூன்ருவது மகளுக 1891, ஏப்ரல் 29ல் பிறந்தார். அவருக்கு பெற்ருேர் இட்ட பெயர் சுப்புரத்தினம். ஆசிரியர் திருப்புளிசாமி ஐயாவிடம், ஆரம்பக் கல்வி கற்ருர். - - மகா வித்துவான் பெரியசாமி ஐயாவிடமும், பங்காரு பத்தரிடமும் இலக்கண் இலக்கியங் களையும், வேதாந்த சித்தாந்தப் பாடங்களையும் பயின்ரு ர். 1908ல் வித்வான்' தேர்ச்சி பெற்ருர், இளமையிலேயே கவிதை இயற்றும் புலமை பெற்ருர். 9 வேணு நாயக்கர் என்பவர் இல்லத்தில் நிகழ்ந்த திருமணத்துக்குச் சென்றிருந்தார் சுப்புரத்தினம், திருமண நிகழ்ச்சிக்குப் பிறகு விருந்து நடை பெற்றது. அதன் பின்னர் பாரதியாரின் தேசீயப் பாடல் ஒன்றைப் பாடினர். சுப்புரத்தினம். அங்கே வந்திருந்த பாரதியாரும் அந்தப் பாடலைக் கேட்டு மகிழ்ந்தார். அதன் பின்னர், பாரதி யாரிடம் சுப்புரத்தினத்தை நண்பர்கள் அறிமுகப் படுத்தி வைத்தனர். காரைக்காலைச் சேர்ந்த நிரவி என்னும் கிராமத்துப் பள்ளியில் சுப்புர்த்தினம் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். - அப்பொழுது இளமையின் மிடுக்கோடு திகழ்ந் தார். அவரும் புதிதாக வந்திருக்கும் ஒரு மாணவரோ என மற்ற மாணவர்கள் எண்ணிக் கொண்டிருந்தனராம். தலைமை ஆசிரியர் வந்து, புதிதாக வந்திருப்பவர் ஆசிரியர் என்று கூறிய பின்னரே விஷயம் புரிந்ததாம்.